யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2026 சட்டமன்ற தேர்தலுக்கு, தவெக சார்பில் இஸ்லாமியர்களுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக சார்பில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. திமுக சார்பில் 4 தொகுதிகளும், அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 8 தொகுதிகளும் இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஏப்ரல் 23 அன்று தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், திமுக, அதிமுக , பாஜக, நாதக, தவெக என அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனுவும் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் 11 இஸ்லாமியர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், திமுக சார்பில் 2 இஸ்லாமியர்கள் மட்டுமே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
இஸ்லாமிய நண்பர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்.
தவெக - 11 🙌
திமுக - 2 👎#தமிழகவெற்றிக்கழகம்
உண்மை என்ன?
முதலில் திமுக வேட்பாளர் பட்டியலை பார்த்தோம். அப்போது ”Tamil Nadu polls: DMK releases list of 164 candidates, fields more than 60 new faces” என்ற தலைப்பில் Times Of India ஊடகத்தில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் திமுக சார்பில் நான்கு தொகுதிகளில் இஸ்லாமியர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, பாளையங்கோட்டையில் அப்துல் வஹாப், ராயபுரத்தில் சுபேர்கான், செஞ்சியில் மஸ்தான், ஆவடியில் நாசர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து திமுக கூட்டணி கட்சிகள் உள்ள இஸ்லாமிய வேட்பாளர்கள் குறித்து பார்த்தோம். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தை, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, காங்கிரஸ் போன்ற கட்சிகள் சார்பில் எட்டு தொகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முடிவு:
எனவே, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு, தவெக சார்பில் இஸ்லாமியர்களுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக சார்பில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறி சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பப்படுகிறது.
