YouTurn

போலியான சமூக வலைத்தள கணக்குகள் மூலமாக ‘போலி தேர்தல் கணிப்புகளை’ பரப்பும் தவெக!

போலியான சமூக வலைத்தள கணக்குகள் மூலமாக ‘போலி தேர்தல் கணிப்புகளை’ பரப்பும் தவெக!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது போன்ற தேர்தல் கருத்து கணிப்புகள் எதையும் நாங்கள் வெளியிடவில்லை என்று ‘Times of India’ மறுப்பு தெரிவித்துள்ளது.

பரவிய செய்தி

சமீபத்தில் ‘Times of India’ நடத்திய கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டில் 22 வயது முதல் 35 வயது வரையில் உள்ள இளைஞர்களில் 43 சதவீதத்தினர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள்.  


image.png


Link

விரிவான விளக்கம்

இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனால் கூட்டணி பேச்சு வார்த்தைகள், தொகுதி பங்கீடு, பிரச்சாரக் கூட்டங்கள் ஆகியவை குறித்து தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 


இந்நிலையில், ‘Times of India’ செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியதாகவும், அதில் தமிழ்நாட்டில் 22 வயது முதல் 35 வயது வரையில் உள்ள இளைஞர்களில் 43 சதவீதத்தினர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள் என்று தெரிய வந்திருப்பதாகவும் தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் பரப்பி வருகிறார்கள். 

உண்மை என்ன? 


பரப்பப்படும் பதிவில் ‘TOI Movies’ என்ற Logo இருப்பதைக் காணமுடிகிறது. இது குறித்து தேடினோம். சினிமா குறித்த செய்திகளை வெளியிட ‘Times of India’ நிறுவனம் ‘Times Entertainment’ என்ற பக்கத்தை நடத்தி வருகிறது. ஆனால் ‘TOI Movies’ என்று அதிகாரப்பூர்வமாக எதையம் அந்நிறுவனம் நடத்தவில்லை. இந்த ‘TOI Movies’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் இயங்கி வருவது போலிக் கணக்குகளாகும். அதற்கும் ‘Times of India’ நிறுவனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 


மேலும் ‘Times of India’ நிறுவனம் ஏதேனும் தேர்தல் கணிப்புகளை வெளியிட்டிருக்கிறதா? என்று தேடியதில், அதன் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் ஒரு அறிவிப்பை காணமுடிந்தது. 



அதில், ‘தவெகவிற்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் 34 சதவீத வாக்குகள் கிடைக்கும்’ என்றும் ‘மொத்தம் 101 முதல் 106 தொகுதிகள் வரை தவெக வெல்லும்’ என்றும் ‘Times of India’ கருத்து கணிப்பு கூறுவதாக பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும்; ‘இது போன்ற தேர்தல் கருத்து கணிப்புகள் எதையும் வெளியிடவில்லை என்று ‘Times of India’ மறுப்பு தெரிவித்துள்ளதையும் காணமுடிகிறது. 


இதிலிருந்து, ‘Times of India’ பெயரில் போலியான தேர்தல் கணிப்புகளை சமூக வலைத்தளங்களில் தவெக ஆதரவாளர்கள் பரப்பி வருவது தெரிகிறது. 


முடிவு: 


‘Times of India’ பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட தேர்தல் கணிப்புகளை, அந்நிறுவனத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி சமூக வலைத்தளப் பக்கங்களில் தவெக ஆதரவாளர்கள் பரப்பி வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க