YouTurn

சன் நியூஸ், கலைஞர் ஊடகத்தை தடைச் செய்த ஒன்றிய அரசு என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சன் நியூஸ், கலைஞர் ஊடகத்தை தடைச் செய்த ஒன்றிய அரசு என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பிப்ரவரி 24, 2026 அன்று ஆபாச உள்ளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்ததற்காக MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel மற்றும் Jugnu போன்ற ஐந்து OTT தளங்களை ஒன்றிய அரசு தடை செய்துள்ளது. அதில் சன் நியூஸ், கலைஞர் ஊடகம் என்று எங்கும் குறிப்பிடவில்லை. மேலும் அவ்விரண்டும் mainstream ஊடகங்களாகும்.

பரவிய செய்தி

Modi Govt Bans 5 Platforms for Content : 

- MoodXVIP

- Koyal Playpro

- Digi Movieplex

- Sun News Tamil

- Kalaignar TV

Earlier, Modi Govt banned Ullu and Alt.

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

ஒன்றிய அரசு ஆபாச உள்ளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்ததற்காக ஐந்து ஓடிடி தளங்களை தடை செய்ததாகவும், அதில் சன் நியூஸ் மற்றும் கலைஞர் டிவியும் உள்ளதாகவும் சமூகவலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

முதலில் ஒன்றிய அரசு தடைச் செய்தது குறித்து தேடினோம். அப்போது இந்து தமிழ் ஊடகத்தில் ”ஆபாச உள்ளடக்கம்: 5 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை” என்ற தலைப்பில் பிப்ரவரி 24, 2026 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஆபாசமான காட்சிகளை ஒளிபரப்பியதாகக் கூறி, ஐந்து ஓடிடி தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது.  உள்ளடக்க ஒழுங்குமுறை விதிகளை மீறியதாகக் கூறி MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel மற்றும் Jugnu ஆகிய ஐந்து தளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் எங்கும் சன் நியூஸ், கலைஞர் டிவி என்று குறிப்பிடவில்லை. 

image.png


இது குறித்து மேலும் தேடியப் போது, The Hindu ஊடகத்திலும் ஆபாச உள்ளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்ததற்காக ஐந்து ஓடிடி தளங்களை ஒன்றிய அரசு தடைசெய்துள்ளதாகவும், MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel மற்றும் Jugnu போன்ற ஓடிடி தளங்கள் தடைச் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சன் நியூஸ், கலைஞர் ஊடகம் தடைச் செய்யப்பட்டுள்ளதாக எங்கும் செய்தி வெளியாகவில்லை. 

image.png


முடிவு: 

எனவே, சன் நியூஸ், கலைஞர் ஊடகம் போன்ற ஊடகங்களை 18 வயதுக்கு மேற்பட்ட உள்ளடக்கத்திற்காக (18+ content) ஒன்றிய அரசு தடை செய்துள்ளதாக பரவும் செய்தி தவறானவை. தவெகவுக்கு ஆதரவாக செயல்படும், JD Troll என்ற எக்ஸ் பக்கத்தில் இதே போன்று தொடர்ச்சியாக பொய் செய்தி மட்டும் பரவி வருகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க