யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கரூர் சம்பவம் நடந்த பின்னர் அது தொடர்பாக வழக்குகளை விசாரிக்கும் போது தான் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கச் சொல்லி தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பரவிய செய்தி
Why SOP not provided upto Jan 2026 ?
2026 ஜனவரி-க்கு முன்பே ஏன் SOP கொடுக்கப்படவில்லை?
விரிவான விளக்கம்
2026 ஜனவரி 5ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் விதமாக வழிகாட்டு நெறிமுறைகளை (standard operating procedure) வெளியிட வேண்டும் என்று 2025 டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார், ‘திமுக ஆட்சியாளர்கள் ஜனவரி மாதம் தான் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வெளியிட்டார்கள். 2025 செம்டம்பர் 18ஆம் தேதியே அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்திருந்தால், கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் ஏற்பட்டிருக்காது’ என்றார்.
உண்மை என்ன?
அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வகுக்கப்படுவது குறித்த தகவல்களைத் தேடினோம்.
‘Deccan Chronicle’ செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியின் படி, 2025 செப்டம்பர் 27 அன்று கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த பின்னர், அது தொடர்பாக வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் 2025 அக்டோபர் 27ஆம் தேதியன்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்வாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.

இதனை தொடர்ந்து 5000 பேருக்கு மேல் கூடும் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த வரைவு ஆவணத்தை (Draft SOP) தமிழ்நாடு அரசு சமர்பித்தது.

இந்த வரைவு ஆவணம் குறித்து அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட திருத்தங்கள், ஆட்சேபனைகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5 தேதிக்குள் வெளியிட வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, கரூர் சம்பவம் நடந்த பின்னர் அது தொடர்பாக வழக்குகளை விசாரிக்கும் போது தான் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கச் சொல்லி தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தெளிவாக தெரிகிறது.
முடிவு:
கரூர் சம்பவத்திற்கு பின்னர் தான் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதை மறைத்து, கரூர் சம்பவத்திற்கு முன்னால் திமுக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கொடுக்கவில்லை என்று தவறாக பரப்புகிறார் தவெக சத்தியகுமார்.