யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆனால் ஊடகங்கள் பலவும் செய்த கள ஆய்வுகளின் படி, தற்போது வரை அந்த டாஸ்மாக் கடை செயல்பாட்டிலேயே உள்ளது என்பதை தெளிவாக அறிய முடிகிறது. எனவே தி.நகரில் பள்ளிக்கு அருகில் உள்ள அந்த டாஸ்மாக் கடையை அரசு சீக்கிரம் மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக தற்போது வரை உள்ளது.
பரவிய செய்தி
"40 வருசமா போராடுனே நடக்கல.. CM -க்கு ரொம்ப நன்றி.." Vlog ஆக எடுத்து நன்றி சொன்ன Principal..!

விரிவான விளக்கம்
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டுருந்தார்.
இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள பிரபல பள்ளி அருகே பல ஆண்டுகளாக செயல்பட்ட டாஸ்மாக்கை நீக்கியதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் நன்றி தெரிவித்துள்ளதாக வீடியோ ஒன்று ஊடகங்களிலும், சமூக வலைதலங்களிலும் வைரலாகி வருகிறது.
"40 வருசமா போராடுனே நடக்கல.. CM -க்கு ரொம்ப நன்றி.." Vlog ஆக எடுத்து நன்றி சொன்ன Principal..! #cmvijay #tasmac #tasmacclosed pic.twitter.com/WWJkUxjHVw
உண்மை என்ன?
இந்த மதுபான கடை மூடப்பட்டுள்ளதாகவும், திறக்கப்பட்டுள்ளதாகவும் பல விவாதங்கள் சமூக வலைதலங்களில் எழுந்து வந்தது. இது குறித்து ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்பதை தேடினோம். அப்போது South Beat யூடியூப் பக்கத்தில், மே 14 அன்று கள ஆய்வு செய்து “பாட்டி சொன்ன பொய்! உண்மை என்ன தெரியுமா?” என்ற தலைப்பில் இது குறித்து ஒரு வீடியோ வெளியாகியிருந்தது.
அதை பார்க்கும் போது, சரியாக 1:01 நிமிடத்தில் தற்போது வரை அந்த டாஸ்மாக் கடை செயல்பாட்டிலேயே உள்ளது என்பதை தெளிவாக அறிய முடிகிறது. மேலும் அதில் பேசிய நபர்கள், அந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு தான் இருக்கிறது என்றும், 5 மணிக்கு மேல் பலரும் குடித்துவிட்டு கடையின் வாசலில் தான் இருப்பார்கள் என்றும் தெரிவித்ததையும், அந்த டாஸ்மாக் கடையை அரசு சீக்கிரம் மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக தற்போது வரை உள்ளது என்பதையும் பார்க்கமுடிந்தது.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, தவெக ஆட்சிக்கு வந்தபின் சென்னை தி,நகரில் பள்ளிக்கு அருகில் செயல்பட்டுவந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதாக ஊடகங்கள் வெளியான செய்தி தவறானவை. தற்போது வரை அந்த டாஸ்மாக் கடை செயல்பாட்டிலேயே உள்ளது.