யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தவெகவின் ஆர்ப்பாட்டம்’ என்று பரவி வரும் இந்த நியூஸ்கார்டு போலியானது. ‘நியூஸ்7 தமிழ்’ இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று உறுதிபடுத்தியுள்ளனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சமீபத்தில் சென்னையில் த.வெ.க தலைவர் விஜய் தலைமையில், காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் மரணத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் வெறும் 26 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றதால், மிகக் குறைந்த நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஆர்ப்பாட்டம் என லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக News7 Tamil ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
இது எவ்வளவு கேவலமான சாதனை தெரியுமா 🤣
இந்த பெருமை எல்லாம் தற்குறி விஜய்க்கே 🤣 pic.twitter.com/GAeyyd8ogY
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தி குறித்து News 7 Tamil ஊடகத்தின் சமூகவலைதளப்பக்கங்களில் தேடி பார்த்தோம். அப்போது இது தொடர்பான எந்த செய்தியும் அங்கு வெளியிடப்படவில்லை என்பதை பார்க்கமுடிந்தது.
இதை மேலும் உறுதி செய்ய, News 7 Tamil ஊடகத்தை தொடர்புக்கொண்டு கேட்ட போது, இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று உறுதிபடுத்தினர்.
மேலும் News 7 Tamil தனது எக்ஸ் பக்கத்தில், இந்த செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிடவில்லை!#Fake | #FactChecking | #TVKVijay | #FackNews | #Vijay pic.twitter.com/wf317yYxn2
எனவே இது போலியான நியூஸ் கார்ட் என்பது உறுதியானது.
இதே போல் சமூகவலத்தளங்களில் பரவிய போலி நியூஸ் கார்ட் குறித்து ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க :
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் போலியான நியூஸ் கார்ட்!
சீமான் நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்துப் பரப்பப்படும் போலி News Card!
முடிவு :
நம் தேடலில், லிம்கா சாதனை புத்தகத்தில் த.வெ.க தலைவர் விஜய் நடத்திய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருள்ளதாக பரவும் நியூஸ் கார்ட் போலியானது என்பது உறுதியானது.
