YouTurn

தமிழ்நாட்டில் விஜய் பேரணிக்கு மட்டும் தான் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதா? உண்மை என்ன?

தமிழ்நாட்டில் விஜய் பேரணிக்கு மட்டும் தான் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சென்னையில் கடந்த 2024 ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற பிரதமரின் பேரணிக்கு காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உண்மை தன்மை அறியாமல் விஜய் தவறான கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

பரவிய செய்தி

Claim 1 : 

தமிழ்நாட்டில் பிரதமருக்கு கட்டுப்பாடு விதிப்பீர்களா? எனக்கு மட்டும் கட்டுப்பாடா? - தவெக தலைவர் விஜய் 

image.png

Youtube Link


Claim 2 : 

தேர்தல் பரப்புரைக்கு சென்னையில் Road Show செய்தார் மோடி.

தேர்தல் தேதி அறிவித்தபின் , காவல்துறை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலில் தான் இயங்கும்.

20 நிபந்நனைகளையும் தேர்தல் ஆணையத்தின் கீழ் இயங்கிய காவல்துறை விதித்தது.

தலைவர் விஜய் எழுப்பிய கேள்வியை திரும்பவும் கேட்கிறேன், 

திமுக அரசின் கீழ் இயங்கும் காவல்துறை பிரதமர் மோடி , அமித்ஷா போன்றோரின் மக்கள் சந்திப்புகளுக்கு இதுவரை நிபந்தனைகள் விதித்துள்ளதா ?? 

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி செப்டம்பர் 13-ந்தேதி திருச்சி, அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து செப்டம்பர் 20 அன்று அவர் நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். அப்போது மக்களிடம் பேசிய விஜய்,  மக்களை சந்திக்க எத்தனை கட்டுப்பாடுகள்; ஆர்எஸ்எஸ் தலைவர் அல்லது பிரதமர் மோடி வந்தால் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். 


உண்மை என்ன? 

முதலில் விஜய் பேசியது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது தினமலர் ஊடகத்தில் ”சென்னையில் பிரதமரின் 'ரோட் ஷோ': 20 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி” என்ற தலைப்பில் ஏப்ரல் 8, 2024 அன்று வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் சென்னையில் ஏப்ரல் 9 அன்று பிரதமர் மோடி பங்கேற்கும் 'ரோடு ஷோ'வுக்கு போலீசார் 20 நிபந்தனைகளை விதித்து அனுமதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில் பிரதமரின் ரோடு ஷோவின் போது தொண்டர்கள் பட்டாசு வெடிக்கக்கூடாது, வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்பக் கூடாது, பிரதமரின் ரோடு ஷோவின் போது உரையாற்றவும் அனுமதியில்லை, பேனர்கள் வைக்கக்கூடாது போன்ற 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே தமிழ்நாட்டில் பிரதமருக்கு கட்டுப்பாடு விதிப்பீர்களா? எனக்கு மட்டும் கட்டுப்பாடா? என தவெக தலைவர் விஜய் பேசியுள்ள கருத்துகள் தவறானவை என்பதை உறுதி செய்ய முடிந்தது. 

image.png


இதையடுத்து  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், காவல்துறை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலில் தான், பிரதமரின் ரோடு ஷோ நடத்த நிபந்தனை விதித்தது என்றும்,  திமுக அரசின் கீழ் இயங்கும் காவல்துறை பிரதமர் மோடி , அமித்ஷா போன்றோரின் மக்கள் சந்திப்புகளுக்கு இதுவரை நிபந்தனைகள் விதித்துள்ளதா ? என்று youturn-ஐ tag செய்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இது குறித்து நாம் ஆய்வில் ஈடுப்பட்டோம். 


அப்போது இந்தியன் எக்ஸ்பிர்ஸ் ஊடகத்தில் இது குறித்து செய்திகள் வெளியாகியிருந்தது. அதில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மூலம் 2024 மார்ச் 16 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, கோவையில் பிரதமரின் ரோடு ஷோ நடத்த காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் பாஜகவினரால் மனு தொடரப்பட்டு, காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்க சொன்ன நீதிமன்றமும் சில நிபந்தனைகளை விதித்தது. அதன்படி கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ சில நிபந்தனைகளுடன், 4 கிமீ-ல் இருந்து 2.5 கிமீ-ஆக குறைக்கப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், காவல்துறை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலில் தான், பிரதமரின் ரோடு ஷோ நடத்த நிபந்தனை விதித்தது என்று கூறி தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். 

image.png


முடிவு: 

எனவே, தமிழ்நாட்டில் பிரதமருக்கு கட்டுப்பாடு விதிப்பீர்களா? எனக்கு மட்டும் கட்டுப்பாடா? என தவெக தலைவர் விஜய் பேசியுள்ள கருத்துகள் தவறானவை. அதே போல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், காவல்துறை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலில் தான், பிரதமரின் ரோடு ஷோ நடத்த நிபந்தனை விதித்தது என்று கூறி தவெகவினர் சமூக ஊடகங்களில் தவறாக பரப்பி வருகிறனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க