YouTurn

தவெக மாநாட்டில் ‘கடவுளே அஜித்தே’ எனக் கோஷமிட்டதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

தவெக மாநாட்டில் ‘கடவுளே அஜித்தே’ எனக் கோஷமிட்டதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தவெக மாநாட்டில் விஜய் பேசும்போது எடுத்த வீடியோவில் அஜித் குறித்த முழக்க ஆடியோ இருப்பதுபோன்று எடிட் செய்துள்ளனர்.

பரவிய செய்தி

மாநாட்டில் பேசிய விஜய்..அவரின் பேச்சை நிறுத்திய `கடவுளே அஜித்தே' விஜய் கொடுத்த ரியாக்சன் | TVK Vijay



image.png


X link

விரிவான விளக்கம்

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். அக்கட்சியின் சார்பில் முதல் மாநில மாநாடு அக்டோபர் 28ஆம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் நடைபெற்றது.


https://x.com/i/web/status/1851595700901159016


அந்த மாநாட்டில் விஜய் பேசும்போது அங்கிருந்த சிலர் ‘கடவுளே அஜித்தே’ எனக் கோஷமிட்டதாகவும் அப்போது சில வினாடிகள் விஜய் தனது பேச்சை நிறுத்தியதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. இதே வீடியோவை தந்தி டிவியும் செய்தியாக வெளியிட்டுள்ளது.


உண்மை என்ன?


’யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது ஒரு குறிப்பிட்ட கலர் பூசப்படுகிறது’ என விஜய் சொல்லும்போதுதான் ‘கடவுளே அஜித்தே’ என்று கோஷம் எழுப்பப்பட்டதாகப் பரவக்கூடிய வீடியோவில் உள்ளது. 


தவெக மாநாடு முழு வீடியோ அக்கட்சியின் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் விஜய் பேசிக்கொண்டு இருக்கும்போது அங்கிருந்த ரசிகர்கள் (தொண்டர்கள்) சிலர் ஏதோ கூச்சல் இடுவதையும் அதற்கு விஜய் கையை காட்டி ’ok ok’ எனச்சொல்வதையும் காணமுடிகிறது (2:13:49). ஆனால், அவர்கள் என்ன கோஷமிடுகிறார்கள் எனத் தெளிவாகக் கேட்கவில்லை. 


அரசியல் சாயம் பூசப்படுவது குறித்து விஜய் பேசுகையில் மாநாடு மேடைக்கு முன்பிருந்த சிலர் எடுத்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் காணமுடிந்தது. அங்கு கேட்கக்கூடிய சத்தத்தைக் கொண்டு அது மாநாட்டுத் திடலில் எடுக்கப்பட்ட வீடியோதான் என்பதை அறியலாம். அதில் அஜித் பற்றி எந்த முழக்கமும் இல்லை. 


அந்த வீடியோவில் ‘TVK… TVK…’ மற்றும் ‘DMK… DMK…’ என இரண்டுவிதமான கோஷங்களையும் கேட்கமுடிகிறது. ஆனால், பரவக்கூடிய வீடியோவில் இருப்பது போன்று ‘கடவுளே அஜித்தே’ என எந்தவொரு இடத்திலும் இல்லை. 


இதிலிருந்து மாநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவில் வேறொரு ஆடியோவை எடிட் செய்து தவறான தகவலைப் பரப்புகின்றனர் என்பதை அறியமுடிகிறது. 


மேலும் படிக்க: 'அதிமுக தலைவர்களுக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல்’ எனத் தந்தி டிவி வெளியிட்ட பழைய செய்தி!

தவெக மாநாட்டுடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்பட்ட பொய் செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 


முடிவு: 


தவெக மாநாட்டில் விஜய் பேசும்போது ‘கடவுளே அஜித்தே’ எனக் கோஷமிட்டதாகப் பரவும் காணொளியில் ஆடியோ எடிட் செய்யப்பட்டது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க