YouTurn

லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியின் பழைய புகைப்படத்தைப் பரப்பும் தவெகவினர்!

லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியின் பழைய புகைப்படத்தைப் பரப்பும் தவெகவினர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய புகைப்படம்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தியிலே “லேடி வெலிங்டன் பள்ளியின் தலைமையாசிரியர் அலட்சியமாக செயல்பட்டு தூய்மை பணியாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டது” என்று குறிப்பிட்டு பரவி வரும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. பின்னர் பள்ளி நிர்வாகம் Child Help Foundation (CHF) அமைப்பிடமிருந்து நிதி உதவி பெற்று பள்ளியின் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை புனரமைத்துள்ளது.

பரவிய செய்தி

லேடி வில்லிங்டன் மகளிர் மேல்நிலைப்பள்ளி திருவல்லிக்கேணியில் (சென்னை, தமிழ்நாடு) அமைந்துள்ளது. இது 108 ஆண்டுகள் பழமையான அரசு பள்ளியாகும். 75 ஆண்டுகள் பழமையான திமுக கட்சியின் சாதனை இது..


image.png


X Link / Archived Link

விரிவான விளக்கம்

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதி சரியாக இல்லை என்றும், இது தான் திமுக அரசின் சாதனை என்றும் கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 


பரவி வரும் இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Times Of India ஊடகத்தில், “Thousand girls suffer as school loos remain closed” என்ற தலைப்பில் அக்டோபர் 21, 2015 அன்று பரவி வரும் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. அதில் லேடி வெலிங்டன் பள்ளியின் தலைமையாசிரியர் அலட்சியமாக செயல்பட்டு தூய்மை பணியாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்காததாலும் இந்த நிலை ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 



இது குறித்து மேலும் தேடிய போது, ”Rs 40 lakh sanctioned to renovate century-old Triplicane school” என்ற தலைப்பில் Times Of India ஊடகத்தில் மார்ச் 11, 2017 அன்று வெளியிட்ட மற்றொரு செய்தி கிடைத்தது. அதில் திருவல்லிக்கேணியில் உள்ள நூற்றாண்டு பழமையான லேடி வில்லிங்டன் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தைப் புதுப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநரகம் ரூ.40 லட்சத்தை அனுமதித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


அதே போல் Child Help Foundation பேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் 23, 2021 அன்று லேடி வில்லிங்டன் மேல்நிலைப் பள்ளி குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள லேடி வில்லிங்டன் மேல்நிலைப் பள்ளியின் கழிப்பறைகள் மற்றும் வகுப்பறைகளை Child Help Foundation வெற்றிகரமாக மாற்றியுள்ளது என்று பதிவிட்டுருந்ததை பார்க்க முடிந்தது. 


துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், அக்டோபர் 10, 2022 அன்று,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் இப்பள்ளியின் கட்டமைப்பு, கழிப்பறை ஆகியவற்றையும் ஆய்வு செய்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதில், கழிப்பறையின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. 


முடிவு: 


கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியின் கழிவறையை அரசு பராமரிக்கவில்லை எனக் கூறி பரவி வரும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதல்ல. கடந்த 2015-ல் எடுக்கப்பட்ட பழையப் புகைப்படத்தை தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க