YouTurn

தூத்துக்குடி சென்ற நிர்மலா சீதாராமனிடம் நிவாரண நிதி எங்கே என மக்கள் முழங்கியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

தூத்துக்குடி சென்ற நிர்மலா சீதாராமனிடம் நிவாரண நிதி எங்கே என மக்கள் முழங்கியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற நிர்மலா சீதாராமனை வழிமறித்த மக்கள் நிவாரண நிதி எங்கே என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு

X post link | Archive link 

விரிவான விளக்கம்

மிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையேயான கருத்து மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்பை பார்வையிட்டாரா என்ற கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், தூத்துக்குடிக்கு வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வழிமறித்த பொதுமக்கள் நிவாரண நிதி எங்கே என முழக்கம் எழுப்பியதாக புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று திமுகவினரால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





இதேபோல், எல்லாவற்றிற்கும் அரசையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் மாறும் வரை தேசம் முன்னேறாது என்று கருத்து தெரிவித்தார் என்று மற்றொரு நியூஸ் கார்டும் பரவி வருகிறது.

உண்மை என்ன ? 

இதுகுறித்து புதியதலைமுறை சேனலின் சமூக வலைதள பக்கங்களில் தேடுகையில், வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய வந்த நிர்மலா சீதாராமன் செய்தி குறித்து டிசம்பர் 26ம் தேதி வெளியான நியூஸ் கார்டில், "தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் உடன் உள்ளனர் " என வெளியாகி இருக்கிறது.



X post link

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற நிர்மலா சீதாராமன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வெள்ள பாதிப்பு புகைப்படங்களை பார்வையிட்டதாகவும், பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.



புதிய தலைமுறை செய்தியில் வெளியான நியூஸ் கார்டில், பொதுமக்கள் வழிமறித்து நிவாரண நிதி முழக்கம் எழுப்பியதாக போலியாக எடிட் செய்துள்ளனர்.



இதுகுறித்து, புதியதலைமுறையின் டிஜிட்டல் பிரிவைத் தொடர்புக் கொண்டு பேசுகையில், அது நாங்கள் வெளியிட்ட கார்டு அல்ல. போலியானது எனத் தெரிவித்து இருந்தனர்.

மேலும் படிக்க : வீடு மற்றும் கடைகளின் வாடகைக்கு 12% ஜிஎஸ்டி என நிர்மலா சீதாராமன் கூறினாரா ?

மேலும் படிக்க : தமிழ்நாட்டின் வெள்ளங்கள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சும், உண்மையும் !

முடிவு : 

நம் தேடலில், தூத்துக்குடி சென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வழிமறித்த பொதுமக்கள் நிவாரண நிதி எங்கே என முழக்கம் எழுப்பியதாக பரவும் புதியதலைமுறையின் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க