YouTurn

‘விமானத்தில் இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் சண்டை’ எனப் பரவும் பயிற்சி வீடியோ!

‘விமானத்தில் இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் சண்டை’ எனப் பரவும் பயிற்சி வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

விமானத்தில் பணிபுரிபவர்கள் பணி நேரத்தில் எவ்வாறு பல்வேறு சூழல்களை கையாள வேண்டும் என்று பயிற்சியளித்த போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

சீட்டிங் fight 

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

விமானத்தில் இருக்கையில் அமர்வது குறித்து இரண்டு நபர்களுக்கு இடையே சண்டை நடைபெற்றதாக 1 நிமிடம் 30 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் முன் இருக்கையில் இருக்கும் ஒரு பெண்மணி, பின் இருக்கையில் இருக்கும் ஒரு நபரிடம் சத்தமாக பேசிக்கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோ கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது fly high institute nagpur என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ ஜூன் 17 அன்று பதிவிடப்பட்டிருந்ததை காணமுடிந்தது. அதில் ஒரு விமானத்தில் செல்லும் ஒரு மந்திரவாதி நடுவானில் மந்திரம் செய்து ஒரு புறாவை கொண்டுவருகிறார். திடீரென பறவை தோன்றியதால் அருகில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்மணி எரிச்சலடைகிறாள். இதையடுத்து அவருக்கும், மந்திரவாதிக்கும் சூடான வாக்குவாதம் ஏற்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


இது குறித்து அந்த பக்கத்தில் மேலும் தேடி பார்த்தோம். அப்போது இது போன்ற பல வீடியோக்கள் அதில் பதிவாகியிருந்தது. குறிப்பாக பரவி வரும் வீடியோ நான்கு பாகமாக அந்த பக்கத்தில் வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


இந்த வீடியோக்கள் குறித்து ஆய்வு செய்த போது, பரவி வரும் வீடியோவில் இருப்பவர்கள், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள ‘Fly High Institute‘ என்னும் பயிற்சி மையத்தை சார்ந்தவர்கள் என்பதும், விமானத்தில் பணிபுரிபவர்கள் பணி நேரத்தில் எவ்வாறு பல்வேறு சூழல்களை கையாள வேண்டும் என்று பயிற்சியளித்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் தெரியவந்தது. 


இதற்கு முன்பும் இதே போன்று பல்வேறு பயிற்சி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.


மேலும் படிக்க : விமானத்தில் டீ-க்கு பதில் காஃபி கொடுத்ததால் கோபமடைந்த முதியவர் எனப் பரவும் பயிற்சி வீடியோ!


முடிவு : 

விமானத்தில் பணிபுரிபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை, இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் சண்டை என தவறாக பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க