YouTurn

செல்போன் எண்களுக்குக் கட்டணம் விதிக்க உள்ளதாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

செல்போன் எண்களுக்குக் கட்டணம் விதிக்க உள்ளதாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இனி, செல்போன் நம்பருக்கும் கட்டணம்.. அரசுக்கு டிராய் பரிந்துரை!


X link

விரிவான விளக்கம்

ஒருவர் பல ஆண்டுகளாக ஒரே தொலைப்பேசி எண்ணைத் தொடர்ந்து பயன்படுத்தவும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்களைப் பயன்படுத்தவும் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசிடம் TRAI (Telecom Regulatory Authority of India) பரிந்துரை அளித்திருப்பதாகப் புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு உட்படப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.


X link



X link


உண்மை என்ன?

ஊடகங்கள் இத்தகைய செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இது பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. 

அதில், ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகள் மற்றும் தொலைப்பேசி எண்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மை அல்ல எனக் கூறப்பட்டுள்ளது. 



மேலும் அவர்களது அதிகாரப் பூர்வ இணைய தளத்திலும் இது பற்றி செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘Revision of National Numbering Plan’ தொடர்பாகக் கடந்த 4ம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. TRAI இந்த அறிக்கை வெளியிட்டதற்கு பிறகு நியூஸ் 18 தமிழ்நாடு அவர்களது செய்தியை திருத்தியுள்ளது.



இவற்றிலிருந்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தி உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது. 

முடிவு: 

ஒருவர் பல ஆண்டுகளாக ஒரே தொலைப்பேசி எண்ணைத் தொடர்ந்து பயன்படுத்தவும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்களைப் பயன்படுத்தவும் கட்டணம் வசூலிக்க TRAI பரிந்துரை எனப் பரவும் செய்தி உண்மை அல்ல. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க