YouTurn

ஒரே நிதியாண்டில் 198 கோடி வருமான வரி செலுத்தினாரா விஜய்? உண்மை என்ன?

ஒரே நிதியாண்டில் 198 கோடி வருமான வரி செலுத்தினாரா விஜய்? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

2022-23 நிதியாண்டில் வருமான வரிக் கணக்கிற்காக காட்டப்பட்ட மொத்த வருமானம் 198 கோடியே 71 லட்சம் ரூபாய் என்றுதான் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரவிய செய்தி

198 கோடியே 71 லட்சம் ரூபாயை விஜய் 2022-2023 ம் Financial Yearல் Income Tax ஆக கட்டியுள்ளார்

@TVKVijayHQ 


image.png


Link / Archive Link


விரிவான விளக்கம்

ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு தேர்தல் நடக்கவிருப்பதால், அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பு, வேட்பு மனு தாக்கல், பிரச்சாரம் என பரபரப்பாக இயங்கி வருகின்றன. கடந்த மார்ச் 30ஆம் தேதி சென்னையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவில் அவரது சொத்து விவரங்கள், நிதி நிலை குறித்த விவரங்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்நிலையில், வேட்புமனுவில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தின் படி, 2022-23 நிதியாண்டில் மட்டும் விஜய் 198 கோடியே 71 லட்சம் ரூபாய் வருமான வரியாக செலுத்தியுள்ளதாக தவெக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்.



உண்மை என்ன?


விஜய் தாக்கல் செய்த வேட்புமனு குறித்து தேடியபோது, இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ‘ECINET’-ல் அது பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது.



அதில், வருமான வரி கணக்கு பற்றிய பகுதியில் ‘வருமான வரிக் கணக்கில் காட்டப்பட்ட மொத்த வருமானம்’ என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 2022-23 நிதியாண்டில் வருமான வரிக் கணக்கிற்காக காட்டப்பட்ட மொத்த வருமானம் 198 கோடியே 71 லட்சம் ரூபாய் என்றுதான் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதனை திரித்து, விஜய் 2022-23 நிதியாண்டில் 198 கோடியே 71 லட்சம் ரூபாய் வருமான வரி கட்டியதாக தவறாக பரப்புகிறார்கள். 


முடிவு:


வருமான வரிக் கணக்கில் காட்டப்பட்ட மொத்த வருமானம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை திரித்து, விஜய் 2022-23 நிதியாண்டில் 198 கோடியே 71 லட்சம் ரூபாய் வருமான வரி கட்டியதாக தவறாக பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க