YouTurn

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தனது ஸ்டண்ட் டூப் நடிகர்களுடன் இருப்பதாக பரப்பப்படும் AI புகைப்படம் !

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தனது ஸ்டண்ட் டூப் நடிகர்களுடன் இருப்பதாக பரப்பப்படும் AI புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

டாம் குரூஸ் தனது டூப் நடிகர்களுடன்.. 

Twitter link | Archive link

விரிவான விளக்கம்

ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான டாம் குரூஸ் தனது திரைப்படங்களில் ஆபத்தான சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும். அவர் நடிப்பில் வெளியாக உள்ள மிஷன் இம்பாசிபிள் 7 திரைப்படத்தில் அவர் மேற்கொண்ட ஆபத்தான ஸ்டண்ட் காட்சி வைரலானது.

இந்நிலையில், டாம் க்ரூஸ் தனது டூப் நடிகர்களுடன் இருக்கும் புகைப்படம் எனக் கூறி சமூக வலைதளங்களில் இப்புகைப்படம் ஆச்சரியத்துடன் வைரலாகி வருகிறது.





உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஜூன் 4ம் தேதி ஃபேஸ்புக் பயனர் Ong Hui Woo என்பவர் மிட்ஜர்னி எனும் ஃபேஸ்புக் குழுவில் டாம் க்ரூஸ் டூப் நடிகர்களின் கொண்டாட்டம் எனக் கூறி இப்புகைப்படங்களின் தொகுப்பை பதிவிட்டு இருக்கிறார்.

இப்பதிவில், இப்புகைப்படங்களை பயன்படுத்த விரும்புவோர் உண்மையான கிரியேட்டரான எனக்கு கிரெடிட் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவருடைய பக்கத்தில் நடிகர் டாம் க்ரூஸ் உருவத்தை வைத்து AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். 

மேலும் படிக்க : ஹாலிவுட் நடிகர் ராக் இந்து மதத்திற்கு மாறியதாக தவறாகப் பரப்பப்படும் AI படங்கள் !

மேலும் படிக்க : பிரதமர் மோடியின் புதிய உடை அலங்காரம் எனத் தவறாகப் பரப்பப்படும் AI புகைப்படம் !

இதற்கு முன்பாக, சமூக வலைதளங்களில் தவறாக பரவிய AI புகைப்படங்கள் குறித்தும் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், டாம் க்ரூஸ் தனது ஸ்டண்ட் டூப் நடிகர்களுடன் இருப்பதாகப் பரப்பப்படும் புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலியான படங்கள் என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க