YouTurn

தமிழ்நாடு மின்வாரியம் திமுகவிற்கு ரூ.25 லட்சம் தேர்தல் நன்கொடை வழங்கியுள்ளது எனப் பொய் பரப்பும் இந்து மக்கள் கட்சி!

தமிழ்நாடு மின்வாரியம் திமுகவிற்கு ரூ.25 லட்சம் தேர்தல் நன்கொடை வழங்கியுள்ளது எனப் பொய் பரப்பும் இந்து மக்கள் கட்சி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழ்நாடு அரசு மின்வாரியம் (TNEB), 2010-11ல் திமுகவிற்கு தேர்தல் நன்கொடையாக ரூ. 25 லட்சத்தை தேர்தல் பத்திரம் மூலம் அளித்துள்ளது. நம்ப முடியவில்லை. இது சட்டப்பூர்வமானது தானா? இது போட்டோஷாப் செய்யப்படவில்லை என்று நம்புகிறேன். 



X Link | Archive Link

விரிவான விளக்கம்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடாத எஸ்பிஐ  வங்கியின் அணுகுமுறை கண்டனத்துக்குரியது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், எஸ்பிஐ வங்கி மூன்றாவது முறையாக தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தரவுகளையும் வழங்கியது. இந்த தரவுகளை மார்ச் 21 அன்று தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பத்திரம் தொடர்பாக பல்வேறு செய்திகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வரும் நிலையில், தற்போது இந்து மக்கள் கட்சி, தமிழ்நாடு அரசு மின்வாரியம் (TNEB) 2010-11 இல் திமுகவிற்கு தேர்தல் நன்கொடையாக ரூ. 25 லட்சத்தை தேர்தல் பத்திரம் மூலம் அளித்துள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 



மேலும் Myneta இணையதளப் பக்கத்திலும், "தமிழ்நாடு அரசு மின்வாரியம் (Tamilnadu Electricity Board) - ரூ. 25 லட்சம்" என்று குறிப்பிட்டு திமுகவிற்கு நன்கொடையாக 2010-11 இல் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 



உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து அறிய, தேர்தல் ஆணையம் இது குறித்து வெளியிட்டுள்ள தரவுகளை ஆய்வு செய்து பார்த்தோம். ஆனால் அதில் மார்ச் 2018 முதல் பிப்ரவரி 2024 வரை கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட நன்கொடை விபரங்கள் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தன.

எனவே இது குறித்து மேலும் தேடியதில், 2010-2011 நிதியாண்டின் போது நன்கொடையாக திமுக பெற்ற நிதி விவரங்கள் குறித்து, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு திமுக அனுப்பிய தகவல் அறிக்கை நமக்கு கிடைத்தது.



அதில் பக்கம் எண் 18-இல் "Tamilnadu Electricity board - LPF Chennai" என்று குறிப்பிட்டு,  29.01.2011 அன்று திமுகவிற்கு தேர்தல் நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 



எனவே Tamilnadu Electricity board - LPF Chennai குறித்து ஆய்வு செய்து பார்த்தோம். Labour Progressive Federation (தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கப் பேரவை) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகும். இது திமுக கட்சியைச் சேர்ந்த ஒரு தொழிலாளர் அமைப்பு. அதன்படி மின்வாரியத்தின் தொ.மு.ச அமைப்பே திமுகவிற்கு 2011 இல் நன்கொடை அளித்துள்ளது. 

இதன் உண்மைத் தன்மையை அறியாமல் பலரும் தமிழ்நாடு அரசின் மின்சார வாரியம் தான் திமுகவிற்கு நன்கொடை வழங்கியுள்ளது என்று கூறி சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

மேலும் தேர்தல் பத்திரமுறை இந்தியாவில் 2017-18 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், "நிதி மசோதா 2017" மூலம் தான் முதன்முதலில் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்து மக்கள் கட்சி திமுகவிற்கு 2010-11 ஆம் நிதியாண்டில் திமுகவிற்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதிக் கிடைத்துள்ளதாகக் கூறி தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவுசெய்துள்ளது. இதுவும் தவறான தகவலே.

மேலும் படிக்க: தேர்தல் பத்திரம் நிதி: வாரிக் குவித்த பாஜக.. ED, IT ரெய்டில் சிக்கிய நிறுவனங்களின் நிதி யாருக்கு?

மேலும் படிக்க: தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக இதுவரை பெற்றது ரூ.6,986.5 கோடி என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

முடிவு:

நம் தேடலில், தமிழ்நாடு அரசு மின்வாரியம் (TNEB), 2010-11ல் திமுகவிற்கு தேர்தல் நன்கொடையாக ரூ.25 லட்சத்தை அளித்துள்ளது என்று இந்து மக்கள் கட்சியும், Myneta இணையதளமும் வெளியிட்டுள்ள செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க