YouTurn

அமைச்சர் உதயநிதி கொடுத்த அரசு பொங்கல் தொகுப்பில் கட்சி சின்னம் என சீமான் பேசிய தவறான தகவல் !

அமைச்சர் உதயநிதி கொடுத்த அரசு பொங்கல் தொகுப்பில் கட்சி சின்னம் என சீமான் பேசிய தவறான தகவல் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நீங்கள் பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்குறீர்கள், சேப்பாக்கத்தில் தம்பி உதயநிதி வேட்டி, சேலை கொடுத்துள்ளார், அதில் எதற்கு உங்கள் படம், உங்கள் அப்பா படம், தாத்தா படம் மற்றும் சின்னம் எல்லாம் இருக்கிறது ? இது யாரு காசு ? - சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்



Youtube Link:


விரிவான விளக்கம்

மிழ்நாடு அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1000ரூ ரொக்கப்பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொகுப்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(13வது நிமிடம்), அரசு அளிக்கும் பொங்கல் தொகுப்பில் திமுக கட்சி சின்னம், கலைஞர், ஸ்டாலின், உதயநிதி புகைப்படம் எல்லாம் ஏன் இடம்பெற்று இருக்கிறது எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.



உண்மை என்ன ?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், ஜனவரி 10ம் தேதி(இன்று) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பொங்கல் தொகுப்பில் கட்சி சின்னமோ, கலைஞர் கருணாநிதியின் புகைப்படமோ, அமைச்சர் உதயநிதியின் புகைப்படமோ இடம்பெறவில்லை. அதில் பொதுவாக, "இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்" என்றும், முதல்வர் ஸ்டாலினின் புகைப்படம் மட்டும் இடம்பெற்று இருப்பதை காண முடிந்தது.





இதே போன்று பொங்கல் தொகுப்பு வழங்கியது குறித்து அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவு செய்துள்ள புகைப்படத்திலும், பொங்கல் தொகுப்பு வழங்கும் மஞ்சள் பைகளில் தமிழ்நாடு அரசின் முத்திரை மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.



ஜனவரி 9ம் தேதி அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள மற்றொரு பதிவில், பொங்கல் தொகுப்புகள் வழங்கியுள்ள பைகளில், கட்சியின் சின்னம், உதயநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரோடு சேர்த்து, சில கட்சி நிர்வாகிகளின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.



அப்பதிவுகளில், "நம்முடைய சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு தைப்பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி வருவதன் தொடர்ச்சியாக இன்று, திருவல்லிக்கேணி பகுதி, 120-ஆவது வட்டக் கழகத்திற்கு உட்பட்ட சுதந்திரா நகரில் வசிக்கும் 1000 பேருக்கு பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி, வெல்லம் உள்ளிட்ட தொகுப்புகளோடு, புத்தாடைகளையும் இன்று வழங்கினோம். அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து, அவர்களின் வாழ்த்துகளையும் பெற்றோம்." என்றுள்ளது.

இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் கட்சியின் சார்பில் பொங்கல் தொகுப்புடன் புத்தாடைகளையும் சேர்த்து வழங்கியதை, அரசு சார்பில் வழங்கியது என்று கருதி, சீமான் தவறான தகவலைப் பேசி உள்ளார்.

மேலும் படிக்க: பொங்கல் பரிசு தொகை டாஸ்மாக் செல்வதாக பழைய புகைப்படத்தினை செய்தியாக வெளியிட்ட தினமலர் !

மேலும் படிக்க: முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டினருக்கு பொங்கல் தொகுப்பு கொடுத்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !

முடிவு :

நம் தேடலில், அமைச்சர் உதயநிதி கொடுத்த தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பில் திமுக கட்சியின் சின்னம் மற்றும் கட்சி நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பதாக சீமான் கூறிய தகவல் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க