YouTurn

கலாமின் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சரியான பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை எனப் பரவும் தவறான செய்தி!

கலாமின் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சரியான பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தை பார்வையிட வருபவர்களின் செல்போன்களை பராமரிக்க தமிழ்நாடு அரசு எந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை.

பரவிய செய்தி

என்னதான் செய்கிறீர்கள் அப்பாவும் மகனும் சேர்ந்து... இந்த அடிப்படை அறிவுகூட இல்லையாடா உங்களுக்கு…

X Link | Archive Link

விரிவான விளக்கம்

ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தை பார்வையிட வருபவர்களின் செல்போன்களை பராமரிக்க தமிழ்நாடு அரசு எந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


வீடியோவில் அப்துல் கலாமின் நினைவிடத்திற்கு வந்த ஒருவர், தன்னுடைய செல்போன் கொண்டு செல்ல உள்ளே அனுமதி இல்லை, மேலும் செல்போனை எதிரே உள்ள கடைகளில் கொடுத்துவிட்டு செல்ல சொல்கிறார்கள் என்று புகார் கூறுவதையும் காண முடிகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவரது நினைவாக ஒன்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) சார்பாக மூன்றரை ஏக்கரில் 'அப்துல் கலாம் தேசிய நினைவகம் 27.07.2017 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டது என்பதை DRDO வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிந்தது. 



இதே போன்று, கலாம் தேசிய நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்காக டி.ஆர்.டி.ஓ அமைப்பால் திறக்கப்பட்டு 26.07.2024 அன்றுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. தினமும் சராசரியாக 7,000 பார்வையாளர்கள் நினைவிடத்தை பார்வையிடுகின்றனர். இதுவரையிலும் 7 ஆண்டுகளில் 1 கோடியே 35 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர் என்பதை இந்து தமிழ் திசை வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது. 



இன்றுவரை ஒன்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) மூலமே கலாம் தேசிய நினைவிடம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்துல் கலாமின் நினைவிடத்தை தமிழ்நாடு அரசு சரியாக பராமரிக்கவில்லை என்று கூறி பலரும் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில், ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தை பார்வையிட வருபவர்களின் செல்போன்களை பராமரிக்க தமிழ்நாடு அரசு எந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க