யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கோவிலில் வெறுப்பை தூண்டும் வகையில் ‘வீரசவாக்கருக்கு ஜே’ என்று கோஷமிட்ட இந்துத்துவ அமைப்பினரை கண்டித்து பேசினார் சேகர் பாபு.
பரவிய செய்தி
திராவிட மாடல் அரசின் கீழ் செயல்படும் இந்து அறநிலையத்துறை நமது கோவில்களை சீரழிப்பதுடன், இந்து பக்தர்களை அவமானப்படுத்தும் செயலிலும் இறங்கியுள்ளார் துறை அமைச்சரான சேகர்பாபு.

விரிவான விளக்கம்
கடந்த ஜனவரி 2ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள கோவில் தேரோட்டத்தில் பங்கேற்க இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வந்திருந்தனர். கோவில் தேரோட்டத்தில் கூட்டத்தில் இருப்பவர்கள் சிலரிடம் சேகர் பாபு ஆவேசமாக பேசும் வீடியோ காட்சியை பதிவிட்டு, ‘சேகர் பாபு பக்தர்களை தரந்தாழ்ந்த முறையில் பேசி அவமானப்படுத்தியதாக’ தமிழ்நாடு மாநில பாஜக பரப்பி வருகிறது.
திராவிட மாடல் அரசின் கீழ் செயல்படும் இந்து அறநிலையத்துறை நமது கோவில்களை சீரழிப்பதுடன், இந்து பக்தர்களை அவமானப்படுத்தும் செயலிலும் இறங்கியுள்ளார் துறை அமைச்சரான சேகர்பாபு. pic.twitter.com/E1QAcDjBMn
உண்மை என்ன?
சேகர் பாபு கோவில் திருவிழாவில் கூட்டத்தினர் மத்தியில் ஆவேசமாக பேசியது குறித்த செய்திகளை தேடினோம். ‘Sun News’, செய்தி ஊடகத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்த செய்தியைக் காணமுடிந்தது. அதில், சுசீந்திரம் கோயிலின் தேரோட்டத்தில் கலந்து கொண்ட இந்துத்துவ அமைப்பினர் சிலர், “பாரத் மாத்க்கி ஜே, வீரசவாக்கருக்கு ஜே, சத்திரபதி சிவாஜிக்கு ஜே” என்று கத்தியதைக் காணமுடிகிறது.

மேலும் ‘Shree TV’ என்ற செய்தித்தளத்தில் வெளியான செய்தியில், இந்த கூட்டத்தினர் சேகர் பாபுவை பார்த்து, “ஹல்லேலூயா பாபு ஒழிக” என்று கத்தியதை காணமுடிகிறது. இதனால்தான் அமைச்சர் சேகர் பாபு அங்கு கோபமாக பேசியுள்ளார்.
இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் சேகர் பாபு தரந்தாழ்ந்த முறையில் பேசியதாக தமிழ்நாடு பாஜகவினர் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.
முடிவு:
கோவிலில் வெறுப்பை தூண்டும் வகையில் கோஷமிட்ட இந்துத்துவ அமைப்பினரை கண்டித்து சேகர் பாபு பேசினார். இதனை மறைத்து, கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் தரந்தாழ்ந்த முறையில் சேகர் பாபு பேசியதாக தமிழ்நாடு பாஜகவினர் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.