YouTurn

திருவாரூர் மாவட்டம் தான் 10, +12 தேர்வு முடிவுகளில் கடைசி இடம்.. பொய் பரப்பும் பெலிக்ஸ்!

திருவாரூர் மாவட்டம் தான் 10, +12 தேர்வு முடிவுகளில் கடைசி இடம்.. பொய் பரப்பும் பெலிக்ஸ்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

திருவாரூர் மாவட்டம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.27% தேர்ச்சி சதவீதத்துடன் 13வது இடத்திலும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.35% தேர்ச்சி சதவீதத்துடன் 25வது இடத்திலும் உள்ளது.

பரவிய செய்தி

தமிழ்நாடு அளவில் திருவாரூர் தான், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் கடைசி இடத்தில் உள்ளது - ஊடகவியலாளர் பெலிக்ஸ்.



Video Link:

விரிவான விளக்கம்

சமீபத்தில் “The Whistle” யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், “திருவாரூரை சொந்த மாவட்டம் மற்றும் சொந்த ஊர் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் அங்கு எல்லாம் அடிப்படை வசதிகளே இல்லை” என்று பேட்டி எடுக்கும் நபர் ஒருவர் கேட்கிறார். அதற்கு, “தமிழ்நாடு அளவில் திருவாரூர் தான், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் கடைசி இடத்தில் உள்ளது. இவ்வளவு பின்தங்கி உள்ளது” என்று ஊடகவியலாளர் பெலிக்ஸ் பதிலளிப்பதை வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.


#திருவாரூர் தொகுதி தான் இருக்கு 🙄 @TRBRajaa இதுல தொழில் வளர்ச்சி பற்றி பாடம் எடுக்குறீங்க கண்டவனுக்கு பதில் சொல்லமுடியாது வேற 👌👌

விஜய்க்கு வந்த கூட்டம் இதுவரை திருவாரூரில் நா பாத்ததே இல்லை - journalist Felix 🔥@TVKVijayHQ pic.twitter.com/3qk5sxERPr

— VIJAY VIGNESH 🇪🇦 TVK 🇪🇦 (@VigneshVic67385) September 21, 2025


உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து, இந்த ஆண்டு (2024-2025) வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து ஆய்வு செய்தோம். 


ஆய்வின் முடிவில், திருவாரூர் மாவட்டம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.27% தேர்ச்சி சதவீதத்துடன் 13வது இடத்தில் உள்ளது என்பதை அறிய முடிந்தது. இதில் ஆண்கள் 93.18 சதவீதமும், பெண்கள் 97.34 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 



இதே போன்று, திருவாரூர் மாவட்டம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.35% தேர்ச்சி சதவீதத்துடன் 25வது இடத்தில் உள்ளது. இதில் ஆண்கள் 92.20 சதவீதமும், பெண்கள் 96.15 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 



இதன் மூலம் திருவாரூர் மாவட்டம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.27% தேர்ச்சி சதவீதத்துடன் 13வது இடத்திலும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.35% தேர்ச்சி சதவீதத்துடன் 25வது இடத்திலும் உள்ளது என்பது தெளிவாகிறது. 


முடிவு: 


நம் தேடலில், தமிழ்நாடு அளவில் திருவாரூர் தான், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் கடைசி இடத்தில் உள்ளது என்று ஊடகவியலாளர் பெலிக்ஸ் கூறியுள்ள செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க