YouTurn

நெல்லை பேருந்து நிலையப் பகுதியில் வெள்ள நீர் வடிந்ததாக போட்டோஷாப் செய்ததாகப் பரவும் வதந்தி !

நெல்லை பேருந்து நிலையப் பகுதியில் வெள்ள நீர் வடிந்ததாக போட்டோஷாப் செய்ததாகப் பரவும் வதந்தி  !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஃபோட்டோ ஷாப் பைத்தியங்க நீங்க..



Twitter Link |  Archive Link

விரிவான விளக்கம்

டிசம்பர் 16 மற்றும் 17 அன்று தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத பெருமழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. எனவே மீட்பு நடவடிக்கைகளுக்கு பின்பு திருநெல்வேலி ஜங்சன் புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளநீர் வடிந்துவிட்டது என்று குறிப்பிட்டு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரான TRB ராஜா தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் "நெல்லை நேற்று இன்று" என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் பலரும் இந்த புகைப்படம் உண்மையானது அல்ல, போட்டோசாப் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். மேலும் அதில், ஒரு புகைப்படத்தில் சாலையின் நடுவே பெரிகாட் மற்றும் சிக்னல் ஆகியவற்றுடன், ஒரு ஓரத்தில் ராம்கோ என்று எழுதப்பட்ட போர்டும் உள்ளது என வட்டமிட்டு குறிப்பிட்டு, இன்னொரு புகைப்படத்தில் அவை எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டு பரப்பி வருவதையும் காண முடிந்தது.





உண்மை என்ன ?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் மேப்பில் ஆய்வு செய்து பார்த்ததில், இவை திருநெல்வேலி ஜங்சன் பெரியார் பேருந்து நிலையம்(புதிய) அருகே அமைந்துள்ள சாலையிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் என்பதை அறிய முடிந்தது.



மேலும் வெள்ளம் ஏற்பட்ட போது அங்கு நிலைமை எவ்வாறு இருந்தது என்பது குறித்து தேடியதில், விகடன் கடந்த டிசம்பர் 18 அன்று வெளியிட்டிருந்த புகைப்படங்கள் கிடைத்தது. கீழ்காணும் படத்தில் பெயர் பலகை, சிக்னல் கம்பம், பெரிகார்ட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.



எனவே திருநெல்வேலி ஜங்சன் புதிய பேருந்து நிலையத்தின் இன்றைய நிலை என்ன என்பதையும், வெள்ள நீர் வடிந்துவிட்டதா என்பதையும் அறிய யூடர்ன் தரப்பிலிருந்து கள புகைப்படங்களை எடுத்து ஆய்வு செய்து பார்த்தோம்.





அதில், திருநெல்வேலி ஜங்சன் புதிய பேருந்து நிலையத்தின் சாலையில், பெரிகாட் மற்றும் சிக்னல் ஆகியவை இன்றும் அமைந்துள்ளன என்பதையும், தற்போது அங்கு வெள்ளநீர் வடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர் என்பதையும் உறுதி செய்ய முடிந்தது.



அதே சமயம், சிக்னல் மற்றும் பெரிகாடைக் கடந்து பேருந்து நிலையத்திற்கு அருகே சென்று, zoom செய்து எடுக்கும் போது புகைப்படத்தில் சிக்னல் மற்றும் பெரிகாட் ஆகியவை நமக்கு பின்புறம் சென்று விட்டதால், அவை புகைப்படத்தில் Cover ஆகவில்லை என்பதையும் அறிய முடிந்தது.



மேலும் படிக்க: திருநெல்வேலியில் ஏற்பட்ட வெள்ளம் எனத் தவறாகப் பரவும் மொராக்கோ வீடியோ !

முடிவு:

நம் தேடலில், 'நெல்லை பேருந்து நிலையம் அன்றும் இன்றும்' எனப் பரவி வரும் புகைப்படங்கள் போட்டோசாப் செய்யப்பட்டவை என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதையும், அவை தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் என்பதையும் உறுதிசெய்ய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க