
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X Link | Archive Link
விரிவான விளக்கம்
இந்த கருத்துக்கணிப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது என்று கூறி, டைம்ஸ் நவ் நியூஸ் சேனலின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் அந்த புகைப்படத்தில், பிஜேபி, அதிமுக மற்றும் மற்ற கட்சியினருக்கு பூஜ்ஜியம் இடங்களே கிடைக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும்
திமுக கூட்டணியே கைப்பற்றும்.
- டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு
பிஜேபி & அதிமுக = 0 #BJPLootingOurTax #SouthRejectsBJP pic.twitter.com/cj1tWhxg2L
— shanmugamchinnaraj (@shanmugamchin10) February 8, 2024
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும்
திமுக கூட்டணியே கைப்பற்றும்.
- டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு
பிஜேபி & அதிமுக = 0 #BJPLootingOurTax #SouthRejectsBJP pic.twitter.com/B8F29HyjbL
— SEENIVASAN DMK (@Seenivasandmk) February 8, 2024
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பை ஆய்வு செய்து பார்த்தோம். அதில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என்று எங்கும் கூறப்படவில்லை.
இதுகுறித்து டைம்ஸ் நவ் ஊடகம், தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா கூட்டணி (I.N.D.I.A) 36 இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும், அதிமுக கட்சி இரண்டு இடங்களையும், மற்ற கட்சிகள் பூஜ்ஜியம் இடத்தையும் கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளது என்று கூறியுள்ளது.
இதே போன்று ஓட்டு சதவீதங்களைப் பொறுத்தவரையில், பாஜக 20.4 சதவீத ஓட்டுகளையும், இந்தியா கூட்டணி (I.N.D.I.A) 59.7 சதவீத ஓட்டுகளையும், அதிமுக 16.3 சதவீத ஓட்டுகளையும், மற்ற கட்சிகள் 3.6 சதவீத ஓட்டுகளையும் கைப்பற்றலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
TIMES NOW-@Matrize_NC Survey
Tamil Nadu (Total Seats- 39): Here are Lok Sabha seat share predictions:
- BJP: 1
- I.N.D.I.A: 36
- AIADMK: 2
- Others: 0
Watch #IndiaUpfront as @PadmajaJoshi further decodes seat share projections. pic.twitter.com/QITZS5IaaV
— TIMES NOW (@TimesNow) February 7, 2024
இந்நிலையில் டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ள எண்ணிக்கைகளை, சிலர் எடிட் செய்து சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

மேலும் படிக்க: ‘விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்’ என அரவிந்த்சாமி கூறியதாக மாலை மலர் வெளியிட்ட தவறான செய்தி!
இதற்கு முன்பும் ஓட்டு எண்ணிக்கைகள் குறித்தும், தேர்தல் குறித்தும் பல செய்திகள் தவறாகப் பரவின. அது குறித்தும் நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: கர்நாடகாவில் அண்ணாமலை பிரச்சாரம் செய்த பூத்தில் 10 ஓட்டு மட்டும் விழுந்ததாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!
முடிவு:
நம் தேடலில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதிமுக பூஜ்ஜியம் இடங்களையும், திமுக கூட்டணி 39 இடங்களையும் பெறும் என டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளதாகப் பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.