YouTurn

ராஜஸ்தானில் சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அடித்து இழுத்துச் செல்லப்படுவதாகப் பரவும் தவறான வீடியோ!

ராஜஸ்தானில் சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அடித்து இழுத்துச் செல்லப்படுவதாகப் பரவும் தவறான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் ஆயுதங்களுடன் பண்ணை வீட்டை சூறையாடிய குண்டர்களை போலீஸார் அடித்து இழுத்துச் செல்லும் வீடியோ இது.

பரவிய செய்தி

ராஜஸ்தானில் இடம்பெற்ற கொடூரம் 13 வயது பெண் பிள்ளையை கடத்தி 32 பேர், 5 நாட்கள் ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!!


இந்த நிலையில்,குறித்த 32 பேரையும் பிடித்த பொது மக்கள் அவர்களை

கயிற்றால் கட்டி,வீதியில் வைத்து தாக்குதல்

#வீடியோ சமூக ஊடகங்களில்

பெரும் வைரலாகியுள்ளது. 



Instagram Link 


Instagram Link


விரிவான விளக்கம்

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீ கங்காநகர் என்னும் பகுதியில் 13 வயது சிறுமியை 30-க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள உள்ளூர் தங்கும் விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில், போலீஸார் 20-க்கும் மேற்பட்டவர்களை கைகளில் கயிற்றைக் கட்டி அடித்து தெருவில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 32 பேரை போலீஸார் கைது செய்து அடித்து இழுத்துச் செல்வதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.




உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’ABP Live’ என்ற குஜராத்தி செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. 



2026 மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், ‘குஜராத் மாநிலம் படன் என்ற மாவட்டத்தின் ஜிலியா என்ற கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டை 15க்கும் மேற்பட்ட குண்டர்கள் ஆயுதங்களுடன் வந்து தாக்கியுள்ளனர். இது தொடர்பான 18 குற்றவாளிகளை கைது செய்த போலீஸார் அவர்களை பொது மக்கள் முன்னிலையில் அடித்து இழுத்துச் சென்றதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. 



இந்த 15க்கும் மேற்பட்ட குண்டர்கள் ஜிலியா கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டின் சுவர்கள், கதவுகளை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்தவர்களை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு நன்கொடை வசூலிப்பதில் ஏற்பட்ட பழைய தகராறு காரணமாக இவ்வாறு பண்ணை வீட்டை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


மேலும் ‘Shining India News’ என்ற ஊடகத்தின் ‘எக்ஸ்’ தளத்திலும் இதே செய்தியைக் காணமுடிகிறது. 


இதிலிருந்து, இந்த வீடியோவில் இருக்கும் சம்பவம் குஜராத் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்தது என்பதும் ஆயுதங்களுடன் பண்ணை வீட்டை சூறையாடிய குண்டர்களை போலீஸார் அடித்து இழுத்துச் செல்லும் காட்சி என்பதும் தெளிவாக தெரிகிறது.


முடிவு:


மூன்று மாதங்களுக்கு முன்னால் குஜராத் மாநிலத்தில் ஆயுதங்களுடன் பண்ணை வீட்டை சூறையாடிய குண்டர்களை போலீஸார் அடித்து இழுத்துச் செல்லும் வீடியோவை, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அடித்து இழுத்துச் செல்லப்படுவதாக என தவறாக பரப்புகிறார்கள்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க