யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நயினார் நாகேந்திரன் அண்ணாமலை பற்றி பேசும் போது கரகோஷம் வருவது போன்ற ஆடியோவை இடைச் சொருகி இந்த வீடியோவை Edit செய்துள்ளனர்.
பரவிய செய்தி
நைனார் நாகேந்திரன் அவர்கள் "அண்ணாமலை" என்ற பெயர் உச்சரித்த போது எழுந்த தொண்டர்களின் விண்ணை பிளக்கும் ஆரவாரம் சொல்கிறது அவர் யார் என்ன செய்திருக்கிறார் என்று. @annamalai_k #Annamalai

விரிவான விளக்கம்
அதிமுக தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையில் சில கசப்பான அனுபவங்கள் இருந்தன. இதனால் வருகின்றன 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வைக்கும் பொருட்டு அவர் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படப் போவதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் ஏற்கெனவே அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தவரான நயினார் நாகேந்திரனை தலைவராக நியமிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக பதவியேற்றார்.
இந்நிலையில், தலைவர் பதவியேற்ற பின்னர் சமீபத்தில் ஒரு பொது மேடையில் நயினார் நாகேந்திரன் பேசும் பொழுது, 'அண்ணாமலை' என்று சொன்னவுடன் அரங்கம் முழுவதும் கரகோஷம் எழுப்பப்படுவது போன்ற ஒரு வீடியோவை அண்ணாமலையின் ஆதரவாளர் 'எக்ஸ்' தளத்தில் வரப்பி வருகிறார்.
நைனார் நாகேந்திரன் அவர்கள் "அண்ணாமலை" என்ற பெயர் உச்சரித்த போது எழுந்த தொண்டர்களின் விண்ணை பிளக்கும் ஆரவாரம் சொல்கிறது அவர் யார் என்ன செய்திருக்கிறார் என்று.🧡🧡🧡@annamalai_k #Annamalai pic.twitter.com/QsYP3GONMB
உண்மை என்ன?
இது குறித்து 'நயினார் நாகேந்திரன் பேச்சு' என்ற keywords பயன்படுத்தி இணையத்தில் தேடியபோது, 'தந்தி டிவி' யூட்யூப் தளத்தில் ஒரு வீடியோவை காணமுடிந்தது. இந்த 21 நிமிட வீடியோ 17/04/25 பதிவேற்றம் செய்யப்படிருந்தது.

அந்த வீடியோவில் குறிப்பாக 3.11 நிமிடத்தில், "அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் சொத்து அதனை யாரும் மறுக்க முடியாது" என்று பேசுகிறார். பரப்பப்படும் வீடியோவில் வரும் அதே வார்த்தைகள் இவை.
ஆனால் இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசும் போது, பரப்பப்படும் வீடியோவில் இருப்பது போன்று ஆரவாரமான கரகோஷம் ஏதும் இதில் இல்லை.
இதிலிருந்து இந்த உண்மையான வீடியோயில், நயினார் நாகேந்திரன் அண்ணாமலை பற்றி பேசும் போது கரகோஷம் வருவது போன்ற ஆடியோவை இடைச் சொருகி Edit செய்துள்ளனர் என்று தெரிகிறது.
முடிவு:
நாயினார் நாகேந்திரன் 'அண்ணாமலை' குறித்து பேசும் போது ஆரவாரமாக கரகோஷம் எழுப்பப்படுவது போன்ற ஆடியோவை இடைச் சொருகி வீடியோவை Edit செய்துள்ளனர். இவ்வாறு Edit செய்யப்பட்ட வீடியோவை அண்ணாமலை ஆதரவாளர் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.