யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பாகிஸ்தானில் கராச்சி நகரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சாலையில் மழைநீர் தேங்கிக் கிடக்கும் நிலையில் வாகனங்கள் அதில் பயணிக்கின்றன. இரு சக்கர வாகனத்தில் ஆணுடன் வந்த பெண் ஒருவர், கைக்குழந்தையுடன் தேங்கி நிற்கும் நீரில் விழுகிறார். நீரில் விழுந்து பெண்ணுக்கும் குழந்தைக்கும் உதவி செய்ய சிலர் ஓடி வருகிறார்கள்.
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததாக தவெக கட்சியின் ஆதரவாளர்கள் பரப்புகிறார்கள்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ‘TOK Videos’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதில், இந்த சம்பவம் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து தேடியபோது, ‘WOW 360’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு, இந்த சம்பவம் கராச்சி நகரத்தில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேஸ்புக் பதிவு கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவிடப்பட்டிருக்கிறது.
இதனை அடிப்படையாகக் கொண்டு தேடுகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில் பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 400 பேர் வரை உயிரிழந்தனர் என்பது தெரியவருகிறது. இதில் கராச்சி நகரமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதிலிருந்து, இது பாகிஸ்தானில் கராச்சி நகரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியாகிறது.
முடிவு:
பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை கொண்டு, தமிழ்நாட்டில் சாலையில் வெள்ளநீர் தேங்கியிருப்பதாக தவெக ஆதரவாளர்கள் தவறாக பரப்புகிறார்கள்.