யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது கடந்த ஏப்ரல் மாதம் உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் நகரத்தில் உள்ள முங்கராபத்ஷாபூர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவமாகும்.
பரவிய செய்தி
விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தும் காவல்துறை... மன சாட்சி இல்லாத முண்டங்கள்.
காவல்துறை என்பதற்கு பதில பதிலாக “காட்டுமிராண்டி துறை தமிழக அரசு” அழைக்கலாம் பெயர் மாற்றம் செய்யலாம்.

விரிவான விளக்கம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு தொடர்பான விசாரணையின் போது போலீஸார் கடுமையாக தாக்கியதால் அஜித்குமார் (27) என்ற இளைஞர் கடந்த ஜீன் 28ஆம் தேதி உயிரிழந்தார். அதன் பிறகு, காவல்துறை வன்முறை பற்றி தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணமிருக்கிறது.
விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தும் காவல்துறை...
மன சாட்சி இல்லாத முண்டங்கள்.
காவல்துறை என்பதற்கு பதில பதிலாக
“காட்டுமிராண்டி துறை தமிழக அரசு” அழைக்கலாம் பெயர் மாற்றம் செய்யலாம் pic.twitter.com/G8lN26iIak
இந்நிலையில், இளைஞர் ஒருவரை போலீஸார் பெல்ட்டால் கொடூரமாக தாக்கம் வீடியோவை பதிவிட்டு, விசாரணை என்ற பெயரில் தமிழ்நாடு காவல்துறை இந்த இளைஞரை அடித்து கொடுமை செய்வதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியதில், ‘Nav Bharat Times’ என்ற செய்தித்தளத்தில் இதுகுறித்த செய்தியைக் காணமுடிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியிருந்த இந்த செய்தியில், இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் என்ற நகரத்தில் உள்ள முங்கராபத்ஷாபூர் காவல் நிலையத்தில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில், ‘இந்த இளைஞர் முங்கராபத்ஷாபூர் காவல் நிலையத்திற்கு ஒரு வேலையாக சென்றுள்ளார். அங்கே காவல் நிலைய பொறுப்பாளர் வினோத் மிஸ்ராவுடன் அந்த இளைஞர் சட்டம் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல் நிலைய பொறுப்பாளர் இளைஞரை தூணில் கட்டி வைத்து பெல்ட்டால் கொடூரமாக அடித்துள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதே சம்பவம் பற்றி ‘ETV Bharat’ செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியைக் காணமுடிகிறது. அதில், ‘உத்தரபிரதேச மாநிலம் முங்கராபத்ஷாபூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞரை போலீஸார் தூணில் கட்டி வைத்து பெல்ட்டால் கொடூரமாக தாக்கியதாகவும், இந்த சம்பவத்தை தொடர்ந்து 6 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்தது என்பது உறுதியாகிறது.
முடிவு:
கடந்த ஏப்ரல் மாதம் உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் நகரத்தில் உள்ள முங்கராபத்ஷாபூர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை தற்போது தமிழ்நாட்டில் நடந்ததாக தவறாக பரப்புகிறார்கள்.