YouTurn

ராம்நாத் கோவிந்தின் மகள் என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

ராம்நாத் கோவிந்தின் மகள் என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது ராம்நாத் கோவிந்தின் மகள் ஸ்வாதி கோவிந்த் அல்ல.

பரவிய செய்தி

இந்த புகைப்படத்தில் சிவப்பு நிற உடையில் இருக்கும் பெண் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜியின் மகள், ஸ்வாதி கோவிந்த். இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிவர்.


image.png


Link / Archive Link  

விரிவான விளக்கம்

ஒரு விமானம் பின்புலத்தில் நின்றுகொண்டிருக்க, விமானப் பணிப்பெண்கள் இரண்டு பேர் வணக்கம் தெரிவிப்பது போன்றதொரு புகைப்படம். அதில் சிவப்பு நிற உடை அணிந்திருக்கும் பெண், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜியினின் மகள் ஸ்வாதி கோவிந்த் என்றும் அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை ஏர் இந்தியாவின் போயிங் 777 மற்றும் 787 விமானங்களில் பணிப்பெண்ணாக பணியாற்றியவர் என்றும் பாஜக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 


உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் தேடுகையில், 2016ஆம் ஆண்டிலிருந்து இந்த புகைப்படம் விமானப் பயணம் சம்பந்தமான விளம்பரங்களிலும், செய்திகளிலும் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. 


image.png

‘முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மகள் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியது’ குறித்து இணையத்தில் தேடுகையில், ‘The Indian EXPRESS’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், ‘ராம்நாத் கோவிந்த்-ன் மகள் சுவாதி, போயிங் 777 மற்றும் 787 விமானங்களில் பணிப்பெண்ணாக பணியாற்றிதாகவும் பின்னர் 2017 அக்டோபர் மாதத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைப்புத் துறைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் துறை, இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா 2007ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட போது அவற்றின் மனிதவளத்தை மேற்பார்வை செய்யும் ஒன்றாகும். 



மேலும் தேடியதில், ’Firstpostசெய்தித்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும் இதே தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மகள் என்பதால் அவருக்கு பாதுகாப்பு தேவைப்படும், ஆனால் அவர் தனது பாதுகாப்பு வீரர்களுடன் விமானத்தில் பயணித்தால் அந்த விமானத்தில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கான இருக்கைகள் குறையும். இதனால் தான் அவர் விமானத்தில் பயணம் செய்யத் தேவையில்லாத வகையில் அலுவலகப் பணிக்கு அவர் மாற்றப்பட்டிருக்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


image.png


மேலும், இந்த செய்திகளில் வெளியிடப்பட்டுள்ள சுவாதி கோவிந்த்-ன் புகைப்படங்கள் பரப்பப்படும் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணுடன் ஒத்துப்போகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேற்குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களிலிருந்து, முன்னாள் இந்திய ஜானதிபதி ராம்நாத் கோவிந்தின் மகளான ஸ்வாதி, விமானப் பணிப்பெண்ணாக வேலை செய்தது உண்மையே. ஆனால் 2017 ஆண்டில் பாதுகாப்பு காரணம் கருதி ஏர் இந்தியாவின் ஒருங்கிணைப்புத் துறைக்கு  மாற்றப்பட்டுவிட்டார்.


முடிவு:


பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது ஸ்வாதி கோவிந்த் அல்ல. இணையத்தில் இருக்கும் வேறொரு புகைப்படத்தை பதிவிட்டு, இவர் தான் விமான பணிப்பெண்ணாக வேலை செய்த முன்னாள் இந்திய ஜானதிபதி ராம்நாத் கோவிந்தின் மகளான ஸ்வாதி என்று திரித்து பரப்பப்படுகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க