YouTurn

விஜய் கீர்த்தி சுரேஷ்-டன் பொங்கல் கொண்டாடியதாக பரப்பப்படும் பழைய வீடியோ!

விஜய் கீர்த்தி சுரேஷ்-டன் பொங்கல் கொண்டாடியதாக பரப்பப்படும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது ஓராண்டுக்கு முன்பு 2025ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோ ஆகும்..

பரவிய செய்தி

கீர்த்தி சுரேஷ் உடன் பொங்கல் கொண்டாட்டத்தில் விஜய்..


image.png



Link / Archive Link 


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை தொடங்கி வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பேட்டியிடவிருப்பதாக கூறி செயல்பட்டு வருகிறார். மற்றொருபுறம் விஜய்-ன் கடைசி படமான ‘ஜனநாயகன்’ தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைக்காமல் ‘பொங்கலுக்கு’ வெளியாகமல் வெளியாகும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் பொங்கல் கொண்டாடத்தில் விஜய் கலந்துகொண்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Behindwoods TV’ யூடியூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.

இந்த வீடியோ 2025 ஜனவரி 15ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை காணமுடிகிறது. அதாவது இந்த வீடியோ ஓராண்டுக்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு (2026) பொங்கல் தினத்தன்று தவெக தலைவர் விஜய் ஏதேனும் பொது அல்லது தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறாரா? என்ற தேடினோம். அவ்வாறு எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ்-டன் பொங்கல் கொண்டாடும் வீடியோ ஓராண்டுக்கு முன்னாள் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.


முடிவு:


ஓராண்டுக்கு முன்னாள் எடுக்கப்பட்ட பழைய வீடியோவை தற்போது நடந்ததாக தவறாக பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க