YouTurn

அறநிலையத்துறை கமிஷனர் கவிதாவிடம் பத்து பவுன் நகை பறிக்கப்பட்டதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

 அறநிலையத்துறை கமிஷனர் கவிதாவிடம் பத்து பவுன் நகை பறிக்கப்பட்டதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது குறித்தான எந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகவில்லை என்பதை பார்க்கமுடிந்தது. மாறாக 2018ஆம் ஆண்டு கோயில் சிலைகளை பழுது பார்க்கும் போது, முறைகேடு நடந்ததாக இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா திடீர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பரவிய செய்தி

மதுரையில் நடந்தது சங்கிகள் மாநாடு..

திருச்செந்தூர் குடமுழுக்கு  தான் முருக பக்தர்கள் மாநாடு - சினேக் பாபு..!

மதுரையில் பாதுகாப்புக்கு ஒரு போலீஸ் கூட இல்லை. எந்த அசம்பாவிதமும் இல்லை.

ஆனால் திருச்செந்தூரில் ஆறாயிரம் போலீஸ் காவல் இருந்தும் 50 பவுனுக்கும் மேற்பட்ட நகைகள் கொள்ளை.

இதுல ஹைலைட் என்னன்னா..?

*அறநிலையத்துறை கமிஷனர் கவிதாவிடம் பத்து பவுன் நகை பறிப்பு..*

இப்ப புரியுதா சங்கிகள் மாநாட்டிற்கும் திராவிடம்(களவானி) கூட்டும் கூட்டத்திற்கும் உள்ள வித்தியாசம்....?

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

அண்மையில் மதுரையில் இந்து முன்னணி சார்பில் முகருன் மாநாடு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் முருகன் மாநாட்டின் போது ஒரு போலீஸ் கூட பாதுகாப்பிற்கு இல்லை என்றும், எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை எனவும் பதிவிட்டுள்ளனர். மேலும் திருச்செந்தூர் குடமுழுக்கில் ஆறாயிரம் போலீஸ் காவல் இருந்தும் 50 பவுனுக்கும் மேற்பட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், அறநிலையத்துறை கமிஷனர் கவிதாவிடம் பத்து பவுன் நகை பறிக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


உண்மை என்ன?

முதலில் முருகன் மாநாட்டில் காவல்துறை பாதுகாப்பு இல்லையா என்பது குறித்து தேடி பார்த்தோம். அப்போது இந்து தமிழ் ஊடகத்தில், ஜூன் 21, 2025 அன்று "முருக பக்தர்கள் மாநாடு: மதுரையில் குவியும் பக்தர்கள் - 1,500 போலீஸார் பாதுகாப்பு" என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாகவும், இதனால் மாநகர காவல் ஆணையர் லோக நாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இதையடுத்து திருச்செந்தூர் குடமுழுக்கின் போது அறநிலையத்துறை கமிஷனர் கவிதாவிடம் பத்து பவுன் நகை பறிக்கப்பட்டது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்பதை தேடி பார்த்தோம். இது குறித்தான எந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகவில்லை என்பதை பார்க்கமுடிந்தது.


மாறாக விகடன் ஊடகப் பக்கத்தில் "சர்ச்சையில் சிக்கிய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட்’ - தமிழக அரசு நடவடிக்கை" என்ற தலைப்பில் அக்டோபர் 10, 2018 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ் கந்தர் சிலையை பழுது பார்க்கும் போது, முறைகேடு நடந்ததாக இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா திடீர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

நம் தேடலில், முருகன் மாநாட்டில் காவல்துறை பாதுகாப்பு இல்லை என்றும், திருச்செந்தூர் குடமுழுக்கின் போது அறநிலையத்துறை கமிஷனர் கவிதாவிடம் பத்து பவுன் நகை பறிக்கப்பட்டதாகவும் பாஜகவினர் பரப்பிய செய்தி தவறானது என்பது தெரியவந்தது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க