யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
கோவில் பணத்தை கொள்ளையடித்த கருணாநிதி. இதை நான் சொல்லவில்லை, திமுக MP ஜெகத் ரட்சகன் கூறுகிறான். மீண்டும் வேண்டாம் திமுக. சிந்தியுங்கள் மக்களே.

விரிவான விளக்கம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கோயில் பணத்தைக் கொள்ளையடித்ததாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பேசியுள்ளார் எனக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
Archive link
அந்த வீடியோவில், கருணாநிதி அறநிலையத்துறை ஆணையரைக் கூப்பிட்டு விபூதி, குங்குமம், நாமக்கட்டி வாங்கிய தொகை 3 கோடி எனப் பொய் கணக்கு எழுதச் சொல்லி அப்பணத்தை அவர் எடுத்துக் கொண்டதாக ஒருவர் பேசுகிறார்.
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவில் பேசுபவருக்குப் பின்னால் சீமானின் புகைப்படத்துடன் கூடிய பேனரும் நாம் தமிழர் கட்சியின் புலி சின்னமும் இருப்பதைக் காண முடிகிறது. ஜெகத்ரட்சகன் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். அவர் ஏன் நாம் தமிழர் கட்சி மேடையில் பேச வேண்டும் என்கிற சந்தேகம் எழுந்தது.
மேலும் அந்த வீடியோவில் ‘எனது ஆசான்’ என்கிற பெயர் இருப்பதைக் காண முடிகிறது. அப்பெயரைக் கொண்டு தேடியதில், ‘எனது ஆசான்’ என்கிற யூடியூப் பக்கத்தில் பரவக் கூடிய வீடியோவின் முழுமையான வீடியோ கிடைத்தது. கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி பதிவிடப்பட்டிருந்த அந்த வீடியோவில் 11வது நிமிடம் 54 வினாடியில் பரவக் கூடிய பகுதி இடம் பெற்றுள்ளது.

அதன் தலைப்பில் ’புலவர் கிருஷ்ணகுமார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இது தொடர்பான பதிவு நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் உள்ளது. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரை ஜெகத்ரட்சகன் எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
மேலும் கலைஞர் அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் போது பொய் கணக்கு எழுதியதாகக் கூறும் தகவல் எங்கு, யார் கூறியது என எந்த தகவலையும் கிருஷ்ணகுமார் மேடையில் குறிப்பிடவில்லை. அது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகவே உள்ளது.
முடிவு :
கலைஞர் அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் போது பொய் கணக்கு எழுதியதாக திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பேசி இருப்பதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அந்த வீடியோவில் இருப்பது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார். மேலும் அது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும்.
கோவில் பணத்தை கொள்ளையடித்த கருநாய்நிதி. இதை நான் சொல்லவில்லை, திமுக MP ஜெகத் ரட்சகன் கூறுகிறான்.
மீண்டும் வேண்டாம் திமுக.
சிந்தியுங்கள் மக்களே. pic.twitter.com/vZbGNzeWSN
— Suresh நீலகண்டன். 1 (@Suresh33737771) February 24, 2024
Archive link
அந்த வீடியோவில், கருணாநிதி அறநிலையத்துறை ஆணையரைக் கூப்பிட்டு விபூதி, குங்குமம், நாமக்கட்டி வாங்கிய தொகை 3 கோடி எனப் பொய் கணக்கு எழுதச் சொல்லி அப்பணத்தை அவர் எடுத்துக் கொண்டதாக ஒருவர் பேசுகிறார்.
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவில் பேசுபவருக்குப் பின்னால் சீமானின் புகைப்படத்துடன் கூடிய பேனரும் நாம் தமிழர் கட்சியின் புலி சின்னமும் இருப்பதைக் காண முடிகிறது. ஜெகத்ரட்சகன் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். அவர் ஏன் நாம் தமிழர் கட்சி மேடையில் பேச வேண்டும் என்கிற சந்தேகம் எழுந்தது.
மேலும் அந்த வீடியோவில் ‘எனது ஆசான்’ என்கிற பெயர் இருப்பதைக் காண முடிகிறது. அப்பெயரைக் கொண்டு தேடியதில், ‘எனது ஆசான்’ என்கிற யூடியூப் பக்கத்தில் பரவக் கூடிய வீடியோவின் முழுமையான வீடியோ கிடைத்தது. கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி பதிவிடப்பட்டிருந்த அந்த வீடியோவில் 11வது நிமிடம் 54 வினாடியில் பரவக் கூடிய பகுதி இடம் பெற்றுள்ளது.

அதன் தலைப்பில் ’புலவர் கிருஷ்ணகுமார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இது தொடர்பான பதிவு நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் உள்ளது. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரை ஜெகத்ரட்சகன் எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
நாடாளுமன்றத் தொகுதி: #தஞ்சாவூர்
நமது வேட்பாளர்: கிருஷ்ணகுமார்
வரிசை எண்: #03
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்!
புதியதொரு தேசம் செய்வோம்!
புரட்சியால் அதை உறுதி செய்வோம்!
- #சீமான் | நாம் தமிழர் கட்சிhttps://t.co/rclXFGhgiD pic.twitter.com/t3qKR3EjI6
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) April 17, 2019