யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
கன்னியாகுமரியில் வாக்கு சேகரிக்க சர்ச் சென்ற திமுகவினர் கிறிஸ்தவ பாதிரியாரிடம் வரும் தேர்தலில் திமுகவிற்கு வாக்கு செலுத்துங்கள் என்று சொன்ன போது, அந்த பாதிரியார் வாக்கு செலுத்த முடியாது என்று மறுத்த காரணத்தால் அவரை தாக்கிய திமுகவினர்

X Link

X Link
விரிவான விளக்கம்
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கின்ற நிலையில், அரசியல் தலைவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் வாக்கு சேகரிக்க தேவாலயம் சென்ற திமுகவினர், கிறிஸ்தவ பாதிரியாரிடம் வரும் தேர்தலில் திமுகவிற்கு வாக்கு செலுத்துங்கள் என்று சொன்ன போது, அந்த பாதிரியார் வாக்கு செலுத்த முடியாது என்று மறுத்த காரணத்தால் அவரை திமுகவினர் தாக்கினர் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், பாதிரியார் ஒருவரை கூட்டத்தில் உள்ள சிலர் தாக்குவதையும், அவருடைய ஆடையில் இரத்தக்கறை இருப்பதையும் பார்க்க முடிகிறது. இதனை அதிமுகவைச் சேர்ந்த நிர்மல் குமார் உட்பட, பாஜகவினர் பலரும் தங்களது சமூக ஊடக பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் பார்க்க முடிகிறது.
இதே போன்று, கன்னியாகுமாரியில் வாக்கு சேகரிக்க சென்று பாதிரியாரை தாக்கும் பாஜகவினர் என்று கூறியும், இதே வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதே வீடியோ கடந்த 2018 இல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
Bangalore Mirror பக்கத்திலும், பரவி வரும் வீடியோ குறித்து கடந்த 2018 லேயே "போலிச் செய்தி: தேவாலயத்தில் பாதிரியாரை பாஜக தொண்டர் அடிக்கவில்லை" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதில், "இச்சம்பவம் சமீபத்தில் தெலுங்கானாவில் நடந்தது. தேவாலய உறுப்பினர்களில் ஒருவர் சுயத்தை இழந்து பாதிரியாரை தாக்கினார். இதில் எந்த அரசியல் கோணமும் இல்லை" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் பரவி வரும் வீடியோ, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டத்தல்ல என்பதையும், இது தெலங்கானா மாநிலத்தில் 2018 இல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது. மேலும் பாதிரியாரை எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் தாக்கவில்லை, தேவாலயத்தில் வேலை செய்யும் ஊழியர் தான் தாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கனல் கண்ணன் பகிர்ந்த வீடியோவில் பெண்களுடன் நடனமாடுவது உண்மையான பாதிரியார் அல்ல!
இதற்கு முன்பும் கிறித்தவ பாதிரியார்கள் குறித்து பல செய்திகள் தவறாகப் பரவின. அப்போதே அது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: கேரள அரசு கோவில்களில் முஸ்லீம், கிறிஸ்தவ பாதிரியார்களை நியமித்ததாகப் பரப்பப்படும் வதந்தி !
முடிவு:
நம் தேடலில், கன்னியாகுமரியில் தங்களுக்கு வாக்கு செலுத்த மறுத்த பாதிரியாரை தாக்கிய திமுகவினர் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

கன்னியாகுமரி : வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினர் பாதிரியார் ஒருவரிடம் வரும் தேர்தலில் திமுகவிற்கு வாக்கு செலுத்துங்கள் என்று சொன்ன போது...
அந்த பாதிரியார் முடியாதுகன்னியாகுமரி : வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினர் பாதிரியார் ஒருவரிடம் வரும் தேர்தலில் திமுகவிற்கு வாக்கு pic.twitter.com/VcWDpJ0Ay8
— sathishkumar p Say No To Drugs &DMK (@PSathishku53831) April 11, 2024
இதே போன்று, கன்னியாகுமாரியில் வாக்கு சேகரிக்க சென்று பாதிரியாரை தாக்கும் பாஜகவினர் என்று கூறியும், இதே வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
கன்னியாகுமாரியில் வாக்கு சேகரிக்க சென்று பாதிரியாரை தாக்க்கும் காவி சங்கிகள் pic.twitter.com/QMKOWAHhfo
— லட்சுமண தேவர். (@imcurus) April 11, 2024