YouTurn

தேர்தலையொட்டி திமுக மது பாட்டிலைப் பரிசாக வழங்குகிறது எனப் பரவும் ஆந்திரப் பிரதேச வீடியோ!

தேர்தலையொட்டி திமுக மது பாட்டிலைப் பரிசாக வழங்குகிறது எனப் பரவும் ஆந்திரப் பிரதேச வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஓட்டுங்கடா ஸ்டிக்கர். இது கொலுசல்ல குவாட்டர். இல்லம் தேடி வரும் திட்டம். தேர்தலுக்கு தயாராகும் திமுக 


X link | Archive link 

விரிவான விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுக வீடு வீடாகப் பரிசு பெட்டி வழங்குகிறது. அதில் மது பாட்டில், சிகரெட், பணம் போன்ற பொருட்கள் இருப்பதாக வீடியோ ஒன்று அதிமுக-வினரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 



Archive link



உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவில் பரிசு பெட்டியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுவின் புகைப்படம் இருப்பதைக் காண முடிகிறது. மேலும் அந்த வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம்.



கடந்த பிப்ரவரி மாதம் இதே வீடியோ சமூக வலைத்தளத்தில் தெலுங்கு தேசம் கட்சியை குறிப்பிட்டுப் பரவியுள்ளது. இதேபோல் YSR காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகனின் படம் அச்சிடப்பட்ட இனிப்பு பெட்டியில் பணம் வைத்து வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதாகவும் ஒரு வீடியோ பரவியது. 

[video width="320" height="584" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2024/03/DyepNvq-kps3flMG.mp4"][/video]

[video width="1920" height="1032" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2024/03/02.mp4"][/video]

அதற்கும் முன்னதாக இரண்டு கட்சிகளின் பெயரும் சின்னமும் அச்சிடப்பட்ட ஆணுறை பாக்கெட்டுகள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதாக தனித்தனியாகப் புகைப்படங்களும் வீடியோக்களும் பரவியது குறிப்பிடத்தக்கது. (TDP | YSRCP)

வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசத்திற்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதனையொட்டி அம்மாநிலத்தில் உள்ள கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. 

அந்த வகையில் மேற்கண்ட இரண்டு விஷயங்களும் அக்கட்சிகளால் வழங்கப்பட்டதா? அல்லது எதிர்க் கட்சிகளின் பிரச்சார யுக்தியா என்பது தெரியவில்லை. ஆனால், அது தேர்தலுக்காக திமுக வழங்கிய பரிசுப் பொருள் கிடையாது என்பதை உறுதி செய்ய முடிகிறது.  

முடிவு : 

தேர்தல் வருவதையொட்டி வாக்காளர்களுக்கு திமுக மது பாட்டிலைப் பரிசாக வழங்குகிறது எனப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அந்த பரிசு பெட்டியின் அட்டைப்படத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுவின் புகைப்படம் உள்ளது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க