YouTurn

பிரதமர் மோடி ஆட்சியில் தான் GST வரி குறைவாக வசூலிக்கப்படுகிறது எனப் பரவும் புகைப்படம்.. உண்மை என்ன?

பிரதமர் மோடி ஆட்சியில் தான் GST வரி குறைவாக வசூலிக்கப்படுகிறது எனப் பரவும் புகைப்படம்.. உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியை விட பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தான் வரி குறைவாக வசூலிக்கப்படுகிறதா?

பரவிய செய்தி

GST யினால் இலாபமா? இல்லை நஷ்டமா? நீங்களே யோசியுங்கள் தமிழ்நாட்டு மக்களே!!! எதையெல்லாம் தமிழ்நாடு அரசு எதிர்க்கிறதோ அதெல்லாம் மக்களுக்கு நல்ல திட்டங்களாக தான் இருக்கும்... VAT இங்கிற பெயரால் பல அடுக்குகளில் மக்களை குழம்ப வைத்து அதிக வரி வசூல் செய்தது யார் என்று தெரிந்து தெளியுங்கள்.

X Link | Archive Link

விரிவான விளக்கம்

பாஜக தலைமையிலான NDA கூட்டணியால் கொண்டு வரப்பட்ட GST மக்களுக்கு இலாபம் மட்டுமே. எதையெல்லாம் தமிழ்நாடு அரசு எதிர்க்கிறதோ அதெல்லாம் மக்களுக்கு நல்ல திட்டங்களாகத்தான் இருக்கும். இதற்கு முந்தைய VAT வரி முறையினால்தான் மக்களிடம் அதிக வரி வசூல் செய்யப்பட்டது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

பரவி வரும் புகைப்படத்தில், சானிட்டரி நாப்கின்கள், உணவகங்கள், உரங்கள், இனிப்பு வகைகள், பெயிண்ட்ஸ், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மிஷின், டிடர்ஜென்ட், ஷாம்பூ மற்றும் சுகாதாரப் பொருட்கள் உட்பட பல பொருட்களின்மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் விதிக்கப்பட்ட வரி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின்போது விதிக்கப்பட்ட வரி என இரண்டும் ஒப்பீடு செய்து காட்டப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. இதில் மன்மோகன் சிங் ஆட்சியை விட பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் வரி விகிதம் குறைவாக விதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.


உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் இதே புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறியமுடிந்தது. 

எனவே பரவி வரும் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரி விகிதங்கள் கடந்த 2022ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட GST வரி என்பதையும் அறியமுடிகிறது. 

GST வரியை இதற்கு முந்தைய VAT வரி வசூல் முறையுடன் ஓப்பீடு செய்யலாமா?

பொதுவாக VAT (Value Added Tax) என்று சொல்லப்படுகின்ற மதிப்பு கூட்டப்பட்ட வரி என்பது ஒவ்வொரு பொருளுக்கும், உற்பத்தி மற்றும் விநியோகத்தின் பல்வேறு நிலைகளைக் கடந்து நுகர்வோரை சென்றடையும் வரை, அதாவது உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் அந்தப் பொருளுக்கு மதிப்புக் கூட்டல் செய்யப்பட்டு வரி விதிக்கப்படும். இந்திய அரசானது கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து இந்த வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்தியது. 

மேலும் VAT என்பது சரக்கு மற்றும் சேவை வரி (GST) போலல்லாமல், நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இது மாநிலத்திற்கு மாநிலம் அடிப்படையில் மாறுபடும். ஒவ்வொரு மாநிலமும் இந்த வரியில் வெவ்வேறு சட்டங்களைக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளன. மேலும் VAT முறையில் மாநிலங்களுக்கு இடையேயான பொருட்களுக்கு, ஒன்றிய அரசு CST என்னும் வரியையும் விதித்துள்ளது. உதாரணமாக சொல்வதென்றால் VAT வரியைப் பயன்படுத்துவதால், ஒரு பாட்டில் மினரல் வாட்டரின் விலை, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு மாறுபடும்.

மாறாக சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்பது நாடு முழுவதும் சரக்குகள், சேவைகள் மற்றும் பொருட்களுக்கு ஒரே மாதிரியான வரிவிதிப்புக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதன் அடிப்படையில் விதிக்கப்பட்ட ஒரு மறைமுக வரியாகும் (Indirect Tax) . இது இந்திய அரசால் 2017ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளும் வெவ்வேறு வரி அடுக்குகளாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.

எனவே இதன்மூலம், மாநிலங்கள் முழுவதும் VAT வரி மாறுபட்டிருப்பதால், VAT வரியை GST உடன் ஒப்பிட முடியாது என்பதை அறியமுடிகிறது. 

முரண்கள்:

VAT வரிவசூல் முறையை, GST உடன் ஒப்பிட முடியாது என்றாலும், GST அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சில பொருட்களின் மீதான வரி VAT வரியை விட அதிகமாக இருப்பதையும் தெளிவாகக் காணமுடிகிறது. GST-க்கு முன், கோதுமை மீதான வரி 2.5 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியின்படி , பேக்கேஜ் (Pre-Package) செய்யப்பட்ட கோதுமைக்கு 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. 

இதே போன்று தயிர், லஸ்ஸி, மோர் போன்ற பொருட்கள் GST-க்கு முன், 4 சதவீத வரியை கொண்டிருந்தன. ஆனால் தற்போது பேக்கேஜ் (Pre-Package) செய்யப்பட்ட தயிர், லஸ்ஸி, மோர் போன்ற பொருட்களுக்கு 5 சதவீத GST வரி விதிக்கப்படுகிறது. மேலும் உணவக விடுதிகளுக்கு 5 சதவீத GST வரி விதிக்கப்படுவதாக பரவி வரும் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அறைக் கட்டணம் ரூ. 7500 க்கு மேல் வசூலிக்கப்படும் உணவக விடுதிகளுக்கு 18 சதவீத GST வரி விதிக்கப்படுவது குறித்து இதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதுபோன்ற பல முரண்கள் இதில் காணப்படுகின்றன.

முடிவு:

நம் தேடலில், அடிப்படையில் நாடு முழுவதும் மாநிலங்கள் இடையே VAT வரி மாறுபட்டிருந்ததால், VAT வரி வசூல் முறையை, GST உடன் ஒப்பிட்டு, பரவி வரும் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.


ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.