யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
தமிழ்நாட்டில் இறுதியான இந்தியா கூட்டணி.. 

விரிவான விளக்கம்
2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் களம் தமிழ்நாட்டில் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. பிரதான கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டனர். சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் பட்டியல் இறுதியாகி விட்டதாக பட்டியல் ஒன்றை திமுகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், திமுக (21), காங்கிரஸ் (8) , விசிக (2), சிபிஎம் (2), சிபிஐ (2), ம.தி.மு.க (1 + ராஜ்யசபா 1), மக்கள் நீதி மய்யம் (1 + ராஜ்யசபா 1), இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (1), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி(1), மனிதநேய மக்கள் கட்சி(1) என ஒதுக்கப்பட்ட சீட் எண்ணிக்கை மற்றும் தொகுதி பங்கீடு பட்டியல் பரவி வருகிறது.
X post link | Archive link
உண்மை என்ன ?
பரவி வரும் பட்டியலில் திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈரோட்டில் போட்டியிடும் என இடம்பெற்றுள்ளது. ஆனால், பிப்ரவரி 24ம் தேதி திமுக கட்சி சார்பில் வெளியான அறிவிப்பில், திமுக கூட்டணியில் உள்ள கொங்கு மக்கள் தேசியக் கட்சி 'நாமக்கல்' தொகுதியில் போட்டியிடும் என அறிவித்து உள்ளனர்.
X post link
இதேபோல், பிப்ரவரி 24ம் தேதி திமுக கட்சி சார்பில் வெளியான அறிவிப்பில், இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் கட்சி 'இராமநாதபுரம்' தொகுதியில் போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் பின், பிற கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
மேலும், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீட்டில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை என செய்திகளில் வெளியாகியது.
இதுகுறித்து, அறிவாலயம் தரப்பை தொடர்புக் கொண்டு பேசுகையில், பரவும் பட்டியல் உண்மையானது அல்ல என மறுப்பு தெரிவித்து இருந்தனர்.
மேலும் படிக்க : 2024 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் தமிழ்நாடுப் பிரிவு அதிமுகவிற்கு ஆதரவா ?.. நியமிக்கப்படாத நபரின் கடிதம் !
மேலும் படிக்க : 2024 தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் கூறியதாகப் பரவும் எடிட் செய்த படம் !
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாட்டில் இறுதியான இந்தியா கூட்டணி எனப் பரவும் பட்டியல் உண்மையானது அல்ல என்பதை அறிய முடிகிறது.

நாற்பதும் நமதே! ✊ Let the game begins pic.twitter.com/slXgBV0LxZ
— Dhivya Marunthiah (@DhivCM) February 25, 2024
X post link | Archive link
தட்டி தூக்குங்க..
வீழட்டும் பாசிசம் !
வெல்லட்டும் இந்தியா !!
நாற்பதும் நமதே ! நாடும் நமதே !!#INDIAAlliance @arivalayam @INCIndia @VCKofficial_ @maiamofficial @cpimspeak pic.twitter.com/1oDhQEJHMO
— Dr M K SHARMILA (@DrSharmila15) February 26, 2024
உண்மை என்ன ?
பரவி வரும் பட்டியலில் திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈரோட்டில் போட்டியிடும் என இடம்பெற்றுள்ளது. ஆனால், பிப்ரவரி 24ம் தேதி திமுக கட்சி சார்பில் வெளியான அறிவிப்பில், திமுக கூட்டணியில் உள்ள கொங்கு மக்கள் தேசியக் கட்சி 'நாமக்கல்' தொகுதியில் போட்டியிடும் என அறிவித்து உள்ளனர்.
2024 நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு!
திமுக கூட்டணியில் உள்ள கொங்கு மக்கள் தேசியக் கட்சி 'நாமக்கல்' தொகுதியில் போட்டியிடும். #Election2024 pic.twitter.com/D8mSW1hVgE
— DMK (@arivalayam) February 24, 2024