YouTurn

தமிழ்நாட்டில் நோயாளிகள் அதிகம் என்பதால் அதிக மருத்துவர்கள் இருக்கிறார்கள் என பாத்திமா ஃபர்கானா பேசியதாகப் பரவும் பொய் !

தமிழ்நாட்டில் நோயாளிகள் அதிகம் என்பதால் அதிக மருத்துவர்கள் இருக்கிறார்கள் என பாத்திமா ஃபர்கானா பேசியதாகப் பரவும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்தியாவுல 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்காங்க. ஆனா தமிழ்நாட்டுல 1000 பேருக்கு 4 மருத்துவர் இருக்காங்க. இதுல இருந்து என்ன தெரியுது? தமிழ்நாட்டுல நோயாளிகள் அதிகம் இருக்காங்கன்னு தெரியுது! 



Facebook link 

விரிவான விளக்கம்

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பாத்திமா ஃபர்கானா ‘தமிழ்நாட்டில் 1000 பேருக்கு 4 மருத்துவர்கள் இருக்கிறார்கள். இதில் இருந்து தமிழ்நாட்டில் நோயாளிகள் அதிகம் இருப்பது தெரியவருகிறது’ எனக் கூறியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

X link



உண்மை என்ன ? 

பாத்திமா ஃபர்கானா பேசியதாகப் பரவும் தகவல் குறித்துத் தேடியதில், அவர் அப்படி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதை அறிய முடிந்தது. 

பரவக் கூடிய நியூஸ் கார்டில் இருக்கக் கூடிய அவரது படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடியதில், 4th Estate Tamil என்னும் யூடியூப் பக்கத்திற்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் அளித்த நேர்காணல் கிடைக்கப் பெற்றது.



அந்த நேர்காணலில் ஹரியானா மற்றும் மணிப்பூரில் நடந்த கலவரங்களில் பாஜகவும் மோடியும் என்ன செய்தார்கள் என்கிற விமர்சனங்களை முன்வைக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பெண்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்கிற விமர்சனங்களையும் முன்வைத்துப் பேசியுள்ளார். 

ஆனால், பரவக் கூடிய கார்டில் இருப்பது போன்று தமிழ்நாட்டில் 1000 பேருக்கு 4 மருத்துவர்கள் இருப்பதற்கு நோயாளிகள் அதிகம் இருப்பது தான் காரணம் என எந்த கருத்தையும் அவர் கூறவில்லை.

இந்த கார்டில் உள்ள பாத்திமாவின் புகைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி 'விகடனில்' வெளியான ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த நேர்காணலிலும் அவர் பரவக் கூடிய கார்டில் இருப்பது போன்று எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. 



இது குறித்து பாத்திமா அவர்களை யூடர்னில் இருந்து தொடர்பு கொண்டு பேசியபோது, "நான் அப்படி எந்த கருத்தையும் சொல்லவில்லை. திமுக-வினர் போலியாக பரப்பி வருகின்றனர்" என விளக்கம் அளித்தார்.

இந்த கார்டினை angry_birdu’ என்னும் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து ‘கூடிய சீக்கிரம் இதையும் ஒரு பாயிண்ட்டுன்னு ஏதாவது ஒரு விவாதத்தில் இவர் பேசுவார்’ எனப் பதிவிடப்பட்டுள்ளது. அதை, அவர் பேசிய கருத்து எனத் தவறாகப் பலர் பரப்பி வருகின்றனர். 



சராசரியாக 1000 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற  நிலையை (WHO) அறிவுறுத்தல்) 2018ம் ஆண்டு இந்தியா எட்டியது. இதே தமிழ்நாட்டில் 1000 பேருக்கு 4 மருத்துவர்கள் உள்ளனர். இது நார்வே மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளில் உள்ள அளவிற்கு முன்னேறிய எண்ணிக்கையாகும். 

மேலும் படிக்க : லஞ்சம் வாங்கி கைதான ஊராட்சி மன்ற தலைவர் நாம் தமிழர் கட்சி என ஊடகங்களில் வெளியான தவறான செய்தி !

இதற்கு முன்னர் நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் பாஜகவில் இணைந்ததாகப் பரப்பப்படும் தவறான தகவல் !

முடிவு : 

நம் தேடலில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பாத்திமா ஃபர்கானா தமிழ்நாட்டில் 1000 பேருக்கு 4 மருத்துவர்கள் இருக்க நோயாளிகள் அதிகம் இருப்பதே காரணம் எனக் கூறியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அவர் அப்படி எந்த கருத்தையும் கூறவில்லை என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…