YouTurn

ரேஷன் கடைகளிலும் இலவசமாக கோமியம் வழங்கப்படும் என்று தமிழிசை கூறியதாக பரவும் போலியான நியுஸ் கார்ட்!

ரேஷன் கடைகளிலும் இலவசமாக கோமியம் வழங்கப்படும் என்று தமிழிசை கூறியதாக பரவும் போலியான நியுஸ் கார்ட்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாடு முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பரவிய செய்தி

அமிர்த நீர் எங்களுக்கு வேண்டாம் நீ குடிநீராவே வாங்கி குடி அவங்க கிட்ட...

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக அமிர்த நீரான கோமியம் வழங்குவோம் என்று பாஜக மூத்ததலைவர் தமிழிசை கூறியதாக தமிழ் ஜனம் ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன?

பரவி வரும் இந்த கருத்தை தமிழிசை சௌந்தரராஜன் கூறினாரா அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு தமிழிசை இப்படி கூறியதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. 


மாறாக கோமியத்தை அமிர்த நீர் என்று  தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக ஜனவரி  21, 2025 அன்று புதிய தலைமுறை ஊடகத்தில் செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில்  “ஒருங்கிணைந்த மருத்துவத்தின்படி கோமியத்தை அமிர்த நீர் என்று சொல்வார்கள். அது 80 வகையான நோய்களை கட்டுப்படுத்துகிறது என்று சொல்கிறார்கள்” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் ரேஷன் கடைகளில்  இலவசமாக வழங்கப்படும் என்றெல்லாம் அவர் கூறியதாக அதில் எந்த தகவலும் இல்லை.

image.png

இதையடுத்து பரவி வரும் நியூஸ் கார்ட்ல் தமிழ் ஜனம் என்று குறிப்பிட்டிருந்ததால், தமிழ் ஜனம் ஊடகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப்பக்கங்களில் தேடிப் பார்த்தோம். இது குறித்தான எந்த நியூஸ் கார்டையும் அவர்கள் வெளியிடவில்லை என்பதை பார்க்கமுடிந்தது.


இதை மேலும் உறுதி செய்ய, தமிழ் ஜனம் ஊடகத்தை தொடர்புக்கொண்டு கேட்ட போது, இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று உறுதிபடுத்தினர். எனவே இது போலியான நியூஸ் கார்ட் என்பது உறுதியானது. 


இதே போல் சமூகவலத்தளங்களில் பரவிய போலி நியூஸ் கார்ட் குறித்து ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளோம். 


மேலும் படிக்க : 

லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தவெகவின் ஆர்ப்பாட்டம்’ என்று பரவும் போலியான நியூஸ் கார்ட்!


சீமானை பார்த்து தான் காமராஜர் மதிய உணவை திட்டத்தை தொடங்கியதாக எடிட் செய்து பரவும் நியூஸ் கார்ட்! 


முடிவு:

நம் தேடலில் பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது என்பது தெரியவந்தது. தமிழ்நாடு முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க