YouTurn

பனையேறி தொழிலை அங்கீகரிக்க மறுக்கிறதா தமிழ்நாடு அரசு? ‘தமிழ் ஜனம்' வெளியிட்ட தவறான செய்தி!

பனையேறி தொழிலை அங்கீகரிக்க மறுக்கிறதா தமிழ்நாடு அரசு? ‘தமிழ் ஜனம்' வெளியிட்ட தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘தமிழ்நாடு பனைமர தொழிலாளிகள் நலவாரியம்’ அமைத்து அதன் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிலாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.

பரவிய செய்தி

‘ஒன்றிய அரசு பனையேறி தொழிலை அங்கீகரித்து அடையாள அட்டை வழங்கும் நிலையில், தமிழ்நாடு அரசு பனையேறி தொழிலை அங்கீகரிக்க மறுக்கிறது’ - ‘தமிழ் ஜனம்’ செய்தி.



Link / Archive Link 

விரிவான விளக்கம்

ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் அமைப்புசாரா (Unorganised sector) தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக ‘E Shram’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. அதன் கீழ் பனையேறும் தொழிலாளர்களையும் இணைத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குகிறது ஒன்றிய அரசு.


இது குறித்த செய்தியை வெளியிடும் போது, ‘ஒன்றிய அரசு பனையேறி தொழிலை அங்கீகரித்து அடையாள அட்டை வழங்கும் நிலையில், தமிழ்நாடு அரசு பனையேறி தொழிலை அங்கீகரிக்க மறுக்கிறது’ என்று வெளியிட்டுள்ளது ‘தமிழ் ஜனம்’ ஊடகம்.


உண்மை என்ன? 


பனையேறி தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாடு அரசு என்ன விதமான முன்னெடுப்புகளை செய்துள்ளது என்பது குறித்து இணையத்தில் தேடினோம்.


‘தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின்’ அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் அவ்வாரியத்தின் கீழ் பல்வேறு தொழில்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதை காணமுடிந்தது. அதில் ‘தமிழ்நாடு பனைமரத் தொழிலாளிகள் நலவாரியம்’யும் ஒன்று. அதன் கீழ், பதனீர் தயாரித்தல், மரம் ஏறும் தொழில் என இரண்டு பிரிவுகளும் உள்ளது. 



மேலும் தேடியதில், தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கீழ், 17 நல வாரியங்கள் செயல்பட்டு வருவதை அறியமுடிகிறது. அதில் தமிழ்நாடு பனைமர தொழிலாளிகள் நலவாரியமும் அடக்கம். 



இந்த நல வாரியத்தின் கீழ் தொழிலாளிகள் பதிவு செய்யப்படுவதும், அவ்வாறு பதிவு செய்யப்பட்ட தொழிலாளிகளுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், கண் கண்ணாடி வழங்கப்படுவது, விபத்து இழப்பீடு வழங்குவது போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 


உண்மை நிலை இவ்வாறு இருக்கையில், தமிழ்நாடு அரசு பனையேறி தொழிலாளர்களை அங்கீகரிக்கவில்லை என்றும் ஒன்றிய அரசுதான் தற்போது அவர்களை அங்கீகாரம் செய்து அடையாள அட்டை வழங்குவதாகவும் தவறான செய்தியை ‘தமிழ் ஜனம்' ஊடகம் வெளியிட்டுள்ளது.


முடிவு: 


பனையேறி தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து அவர்களை தமிழ்நாடு அரசு ஏற்கனவே பதிவு செய்து வரும் நிலையில், ‘தமிழ்நாடு அரசு பனையேறி தொழிலை அங்கீகரிக்க மறுக்கிறது; ஒன்றிய அரசு தான் பனையேறி தொழிலை அங்கீகரித்து அடையாள அட்டை வழங்குகிறது’ தவறான செய்தியை ‘தமிழ் ஜனம்' ஊடகம் வெளியிட்டுள்ளது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க