YouTurn

சூரத் பேருந்து விபத்து தொடர்பான பழைய வீடியோவை மதரீதியாகப் பரப்பும் வலதுசாரிகள் !

சூரத் பேருந்து விபத்து தொடர்பான பழைய வீடியோவை மதரீதியாகப் பரப்பும் வலதுசாரிகள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

பஸ் உடைப்பது சொத்தை எரிப்பது இவர்களின் DNA வில் கலந்து உள்ளது.

X Link | Archive Link

விரிவான விளக்கம்

சிவப்பு நிற அரசு பேருந்து ஒன்றின் கண்ணாடியை முஸ்லீம் நபர் ஒருவர் கல்லால் தாக்குவது போன்ற 6 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மேலும் பரவி வரும் பதிவுகளில் "பஸ்ஸை உடைப்பது, சொத்தை எரிப்பது, இவர்களின் DNA வில் கலந்து உள்ளது போல" என்று குறிப்பிட்டு வலதுசாரிகள் பலரும் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.





உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதே வீடியோ கடந்த 2019 இல் இருந்தே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (Citizenship Amendment Bill) எதிராக முஸ்லீம்கள் கலவரம் செய்வதாகக் கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.



கடந்த 2017, ஜனவரி 28 அன்று குஜராத்தி செய்தி ஊடகமான News4india India என்ற யூடியூப் பக்கத்தில், பரவி வரும் வீடியோவின் முழுப் பகுதி "சூரத்:- உதானாவில் உள்ள பிஆர்டிஎஸ் சாலையில் நடந்து சென்றவர் மீது பேருந்து ஓட்டுநர் மோதியதில் விபத்து" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் அந்த வீடியோவின் விளக்கத்திலும், "சூரத்தின் உதானாவில் உள்ள சத்யாநகர் BRTS சாலையில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பாதசாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. பாதசாரி பலத்த காயம் காரணமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மக்கள் பேருந்து மீது கற்களை வீசினர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



அந்த வீடியோல் சரியாக 30 வது நொடியில், முஸ்லீம் ஒருவரைத் தவிர இன்னும் சிலரும் பேருந்தின் மீது கற்களை எறிவதையும் பார்க்க முடிகிறது.  இதன் மூலம் கடந்த 2017 ஜனவரியில் சூரத்தில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பாதசாரி மீது ஏற்படுத்திய விபத்து காரணமாக பொதுமக்கள் கற்களை வீசி பேருந்தை தாக்கும் வீடியோவை, மதரீதியாக சிலர் கடந்த 2019 இல் இருந்தே சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க: வெறுப்புணர்வின் உச்சம், “அயோத்தி கோவிலில் குண்டு வெடிப்பு” என முஸ்லீம்கள் பெயரில் மிரட்டல் விடுத்துள்ள இளைஞர்கள் !

மேலும் படிக்க: முஸ்லீம் வியாபாரி ஜூசில் எச்சில் துப்பிக் கொடுப்பதாகத் தவறாகப் பரவும் சித்தரிப்பு வீடியோ !

முடிவு:

நம் தேடலில், அரசு பேருந்து ஒன்றின் கண்ணாடியை முஸ்லீம் ஒருவர் கல்லால் தாக்குவதுவதாக பரவும் வீடியோ, 2017ல் சூரத்தில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பாதசாரி மீது ஏற்படுத்திய விபத்து காரணமாக பொதுமக்கள் கற்களை வீசி பேருந்தை தாக்கும் வீடியோ என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க