யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
விஜய் பரப்புரை வாகனத்தை பின் தொடர்ந்து விபத்து ஏற்பட்டது குறித்து ‘சன் நீயூஸ்’ வெளியிட்ட News Card-ஐ Edit செய்து, போலியாக உருவாக்கப்பட்ட News Card இது.
பரவிய செய்தி
“68 பேர் இறந்தவங்களையே பாக்காதவங்க, இங்க வந்தா பார்க்கப் போறாங்க?”
ஸ்டாலினின் பரப்புரை வாகனத்தை பின் தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள விக்னேஷின் தந்தை வேதனை!

விரிவான விளக்கம்
முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்கு சென்றபோது, அவரது பரப்புரை வாகனத்தை பின் தொடர்ந்து வந்த விக்னேஷ் என்ற இளைஞர் ஒரு சிக்கி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இது குறித்து விக்னேஷின் தந்தை செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 68 பேர் இறந்தபோது வந்த பார்க்காத திமுக என் மகனை விஷயத்தில் மட்டும் எதாவது செய்யும் என்று நம்பவா முடியும்?’ என்று கூறியதாகவும் ’சன் நீயூஸ்’ செய்தி வெளியிட்டிருப்பதாக News Card ஒன்று பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
பரப்படும் News Card-ல் இருக்கும் 'பிரச்சார வாகனத்தை பின் தொடர்ந்து விக்னேஷ் என்ற இளைஞர் மருத்துவமனையில் அனுமதி' என்ற keywords கொண்டு தேடினோம். ’சன் நீயூஸ்’ செய்தி ஊடகத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் மார்ச் 4ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த News Card ஒன்றைக் காணமுடிந்தது.
#NewsUpdate | விஜயின் பரப்புரை வாகனத்தை பின் தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கி, ஐ.சி.யு.வில் உள்ள கல்லூரி மாணவர் விக்னேஷ்
இரட்டையர்களான விக்னேஷ் - குமரேஷ் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வருவதாக தந்தை தகவல்#SunNews | #Thanjavur | #TVK pic.twitter.com/OvjrhlxWUx
அதில், விஜயின் பரப்புரை வாகனத்தை பின் தொடர்ந்து சென்று விக்னேஷ் என்ற இளைஞர் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விக்னேஷின் தந்தை பாண்டியன் “41 பேர் இறந்தவங்களையே பாக்காதவங்க, இங்க வந்தா பார்க்கப் போறாங்க? இவங்க கட்சி வந்து என்ன பண்ணப் போகுது?” என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தேடியதில், கடந்த மார்ச் 4ஆம் தேதி தஞ்சையில் நடந்த த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள தவெக தலைவர் விஜய் வந்தார். அப்போது விஜயின் பிரச்சார வாகனத்தை இளைஞர்கள் பலர் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த போது ஏற்பட்ட விபத்தில் விக்னேஷ் என்ற இளைஞர் காயமடைந்ததாக அறிய முடிகிறது.

இந்த விக்னேஷின் தந்தை தான் பாண்டியன். அவர் ’கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தின் போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததை குறிப்பிட்டு, அப்போது பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வராத விஜய் இப்போது மகனை பார்க்க வரப்போகிறார்? என்று கேட்டிருக்கிறார்.
இது குறித்து ‘சன் நீயூஸ்’ வெளியிட்ட News Card-ஐ Edit செய்து, ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை பின் தொடர்ந்த போது விபத்து ஏற்பட்டதாகவும், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து இறந்த 68 பேரை பார்க்க வராத ஸ்டாலின் இப்போது வரப்போகிறரா? என்று விக்னேஷின் தந்தை கேட்டதாக குறிப்பிடும் போலியான News Card-ஐ உருவாக்கி சமூக வலைத்தில் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
விஜய் பரப்புரை வாகனத்தை பின் தொடர்ந்து விபத்து ஏற்பட்டது குறித்து ‘சன் நீயூஸ்’ வெளியிட்ட News Card-ஐ போலியாக Edit செய்து, ஸ்டாலின் பரப்புரை வாகனத்தால் விபத்து ஏற்பட்டதாக தவறாக பரப்பிவருகிறார்கள்.