யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் வீரவள்ளி என்னும் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் நடந்ததாகும்.
பரவிய செய்தி
‘ஒழுக்கமற்ற மாணவர் சமுதாயம் பாதுகாப்பில்லாத ஆசிரியர் சமூகம்’!
மொத்தமா முடிச்சு விட்ட ஸ்டாலின்.
விரிவான விளக்கம்
பள்ளிச் சீருடையில் இருக்கும் மாணவர் ஒருவன் நடுத்தர வயதுடைய ஆசிரியர் ஒருவரை தாக்குகிறான். ஆசிரியை ஒருவரும் சக மாணவர்களும் அந்த மாணவனை தடுக்கிறார்கள். பள்ளி வகுப்பறையில் நடக்கும் இந்த சம்பவத்தின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தமிழ்நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் இது நடந்ததாக அதிமுக இணைய அணி பரப்பி வருகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடினோம். ’News 18 தமிழ்நாடு’ செய்தித்தளத்தில் இது குறித்த செய்தியைக் காணமுடிந்தது.

மார்ச் 05ஆம் தேதி வெளியாகியுள்ள அந்த செய்தியின் படி, இந்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் வீரவள்ளி என்னுமிடத்தில் உள்ள ஜில்லா பரிசத் உயர்நிலைப்பள்ளியில் நடந்ததாக தெரிய வருகிறது. அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் சரியாக பள்ளிக்கு வராததை அந்த வகுப்பாசிரியர் கண்டித்துள்ளார். இதனால், அந்த மாணவனுக்கும் வகுப்பு ஆசிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மாணவன் திடீரென்று எழுந்து வகுப்பாசிரியர் நெஞ்சில் ஓங்கி குத்தியுள்ளார். மேலும் அந்த மாணவன் ஆசிரியரை தாக்காமல் சக மாணவர்கள் அவனை தடுத்துள்ளார்கள்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் வீரவள்ளி என்னும் பகுதியில் உள்ள பள்ளியில் நடந்துள்ளதை அறிய முடிகிறது.
முடிவு:
ஆந்திராவில் நடந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக அதிமுக இணைய அணி தவறான தகவலை பரப்பிவருகிறது.