YouTurn

தெருநாய்களைக் கொல்ல தமிழ்நாடு அரசு ரூ.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகப் பரவும் தவறான தகவல்!

தெருநாய்களைக் கொல்ல தமிழ்நாடு அரசு ரூ.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்தக் கொடுமையைச் செய்றதுற்கு 20 கோடியை ஒதுக்கியிருக்கும் தமிழ்நாடு அரசை யாரும் கேள்வி கேட்பதில்லை!

X link

விரிவான விளக்கம்

தெரு நாய்கள் அடித்துக் கொல்லப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. அந்த வீடியோவில் ஒரு வண்டி முழுக்க நாய்கள் கட்டிப்போட்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் வீடியோ எடுப்பவர் எதற்கு இப்படி அடித்துக் கொல்கிறீர்கள்? எனக் கேள்வி கேட்டதற்கு ’வெறிபிடித்த நாய்’ என ஒருவர் பதில் அளிக்கிறார். கட்டிப்போட்டு இப்படிச் செய்யச் சொல்லி யார் சொன்னது? உயிருக்குப் போராடும் நாயைக் கால்நடை மருத்துவமனையில் சேர்க்கிறீர்களா? இல்லை என்றால் உங்கள் மீது விலங்கு நலவாரியத்தில் புகார் கொடுக்கவா? வெறிபிடித்த நாயை இப்படிக் கொல்லச் சொல்லி உத்தரவு இருக்கிறதா? அரசாணை காண்பியுங்கள்? என பல்வேறு கேள்விகளை வீடியோ எடுப்பவர் கேட்கிறார். 



அப்பதிவில் ‘இந்த கொடுமையைச் செய்வதற்கு 20 கோடி ரூபாயைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது. 

உண்மை என்ன ?

தெரு நாய்களை அடித்துக் கொல்வதாகப் பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். இதே வீடியோவை ’பொன்னர் மேனியன்’ என்பவர் 2021, மார்ச் 30ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாய்களை அடித்து கொண்டு வந்து குப்பைத் தொட்டியில் போடும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும் இதே தகவல் Yes Gee News’ என்னும் எக்ஸ் பக்கத்திலும் 2021, மார்ச் 28ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு தமிழ்நாடு அரசு 20 கோடி ரூபாய் ஒதுக்கியதாகக் கூறப்படுவது பற்றியும் தேடினோம். தமிழ்நாடு அரசு சமீபத்தில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டினை வெளியிட்டுள்ளது. அதில் தெரு நாய்கள் தொடர்பான அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.



கால்நடை பராமரிப்பு எனத் தலைப்பிட்டுள்ள பகுதியில், “கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் உரிய இனப்பெருக்கத் தடை சிகிச்சைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலாமல் போனதால், மாநிலத்தில் பல இடங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை உயர்ந்து. அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. எனவே, விலங்குகள் இனப்பெருக்கத் தடை திட்டத்தை மேலும் முறையாகச் செயல்படுத்திடவும். தமிழ்நாட்டின் பல இடங்களில் இயங்கிவரும் இனப்பெருக்கத் தடை மையங்களை மேம்படுத்திடவும் 2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மேலும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்திற்கு வரும் நிதியாண்டில் 11 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்” என்றுள்ளது. 

அதாவது தெருநாய்களின் இனப்பெருக்கத் தடை திட்டத்தை முறையாகச் செயல்படுத்த 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தெரு நாய்கள் பொது மக்களையும் குழந்தைகளையும் கடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. 

தெருநாய் கடி குறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குச் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் 2023, டிசம்பர் 12ம் தேதி பதில் அளிக்கப்பட்டுள்ளது. அத்தரவின்படி 2023ல் அதிகப்படியாக மகாராஷ்டிராவில் 4,35,136 பேரும், தமிழ்நாட்டில் 4,04,488 பேரும் நாய்க் கடிக்கு உள்ளானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



சென்னை ராயபுரம் பகுதியில் 2023, நவம்பர் மாதம் ஒரு தெருநாய் 28 பேரைக் கடித்த சம்பவம் பெரிய அளவில் பேசு பொருளானது. அந்த நாயை பொது மக்கள் அடித்துக் கொன்றனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையும், வெறி நோய் தடுப்பூசியும் போடப்பட்டது. இப்பணி சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலும் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, கருத்தடை சிகிச்சை செய்வது மற்றும் புதியதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாய்களைக் கட்டுப்படுத்த கருத்தடை சிகிச்சை செய்யத்தான் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், நாய்களைக் கொல்ல தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகத் தவறான செய்தி பரப்பப்படுகிறது.

முடிவு : 

நாய்களைக் கொல்ல தமிழ்நாடு அரசு 20 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை சிகிச்சை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி. மேலும் பரவக் கூடிய வீடியோ 2021ம் ஆண்டு மார்ச் முதலே சமூக வலைத்தளத்தில் உள்ளது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க