YouTurn

3,000 கோடி ரூபாய் சர்தார் வல்லப்பாய் பட்டேல் சிலையில் விரிசல் விழுந்ததாகப் பரவும் 2018ஆம் ஆண்டின் பழைய புகைப்படம்!

3,000 கோடி ரூபாய் சர்தார் வல்லப்பாய் பட்டேல் சிலையில் விரிசல் விழுந்ததாகப் பரவும் 2018ஆம் ஆண்டின் பழைய புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

3,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சிலையின் அடியில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகப்பக்கங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

பரவிய செய்தி

பீசேபீ சாதனை

3,000 கோடி சிலையில் அடியில் விரிசல்கள். விழுந்தால் 3000 கோடி அம்போ


X link

Archive link

விரிவான விளக்கம்

உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமைபெற்ற சர்தார் வல்லபாய் படேலின் 'ஒற்றுமை சிலை' நர்மதை ஆற்றின் கரையில், 182 மீட்டர் உயரம் கொண்ட இந்தச் சிலையை, சர்தார் வல்லபாய் பட்டேலின் 143ஆவது பிறந்த தினமான 2018 அக்டோபர் 31ஆம் தேதி, பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலையை கட்டுவதற்காக சுமார் 3000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்தச் சிலை எழுப்பப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவந்த பழங்குடி மக்கள் அகற்றப்பட்டதால் அங்கே பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் 3,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சிலையின் அடியில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகப்பக்கங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 


உண்மை என்ன ?


பரவிவரும் புகைப்படத்தை “Google Reverse Image Search” ஆய்வு செய்து பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பது தெரியவந்தது.


Danish மொழியில் இயங்கக் கூடிய EkstraBladet என்ற இணையதளப்பக்கத்தில் அக்டோபர் 26, 2018 அன்று செய்தி ஒன்று பதிவு செய்திருப்பதை கவனித்தோம். அந்த செய்தியில் பரவக்கூடிய புகைப்படம் இருப்பதை பார்க்கமுடிகிறது.  


இந்த செய்தியினை Google Translate உதவியுடன்  மொழிபெயர்த்ததில்,  சிலையினைக் குறித்தும், கட்டுமானப் பணியின்போதும் எடுக்கப்பட்டப் சில புகைப்படங்களையும் காணமுடிந்தது.

 

மேலும், இந்திய அரசின் PIB Fact Check அவர்களது எக்ஸ் பக்கத்தில் செப்டம்பர் 9,2024 அன்று பரவக்கூடிய புகைப்படத்தை குறிப்பிட்டு இது தவறான தகவல்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 



இவற்றிலிருந்து பரவக்கூடியப் புகைப்படம் 2018ஆம் ஆண்டு சர்தார் வல்லப்பாய் பட்டேலின் சிலை கட்டுமானத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறியமுடிகியது 


முடிவு:

நம் தேடலில் 3,000 கோடி  ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சிலையில் விரிசல் இருப்பதாகப் பரவும் புகைபடத்தகவல் தவறானது. உண்மையில் இது 2018ஆம் ஆண்டு சிலை கட்டுமானத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.


சுருக்கமாக


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க