YouTurn

கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்க்கவில்லை என ’தவறான தகவலை’ பரப்பும் ஆதவ் அர்ஜுனா!

கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்க்கவில்லை என ’தவறான தகவலை’ பரப்பும் ஆதவ் அர்ஜுனா!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிப்பட்டது.

பரவிய செய்தி

கரூர் அரசு மருத்துவமனையில் சரியான உபகரணங்களே கிடையாதுனு ரிப்போர்ட் வருது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை ஏன் பக்கத்துல இருக்கிற பிரைவேட் ஹாஸ்பிட்டல எல்லாம் சேர்க்கல.

 - ஆதவ் அர்ஜுனா, தவெக தேர்தல் வியூக வகுப்பாளர்.

image.png


Link 

விரிவான விளக்கம்

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின்னர் தவெக கட்சி ரீதியான கூட்டங்கள் எதுவும் நடத்தப்படமால் இருந்த நிலையில், தற்போது நவம்பர் 5ஆம் தேதி தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. 


அக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின்  தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, ‘கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அதில் பாதிக்கப்பட்ட மக்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்காமல் சரியான உபகரணங்கள் இல்லாத கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக’ கூறுயுள்ளார்.



உண்மை என்ன?


கரூர் கூட்ட நெர்சல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த செய்திகளை தேடியபோது, ‘News18 Tamil Nadu’ ஊடகத்தின் பேஸ்புக் பக்கத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி அன்று வெளியிட்டப்பட்டுள்ள செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.



அதில், ’அமராவதி மருத்துவமனையில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட 32 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுகுறித்து மேலும் தேடியதில் ‘இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், செப்டம்பர் 28ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியின்படி, ‘மொத்தமாக 111 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும்; அக்‌ஷயா, அப்பலோ, அமராவதி உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக’ தெரியவருகிறது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிப்பட்டது தெரியவருகிறது.


முடிவு:


கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அதில் பாதிக்கப்பட்ட மக்களை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவில்லை என்று ஆதவ் அர்ஜுனா தவறான தகவலை மேடையில் கூறுகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.