YouTurn

பஹம்காம் தாக்குதலில் உயிர் துறந்த இஸ்லாமியர் குறித்து தவறாக செய்திப் பரப்பும் வலதுசாரிகள்!

பஹம்காம் தாக்குதலில் உயிர் துறந்த இஸ்லாமியர் குறித்து தவறாக செய்திப் பரப்பும் வலதுசாரிகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஒரு பெண்ணிடம் மதம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக கைது செய்யப்பட்டுள்ள 'எஜாஸ் அகமதுவின்' புகைப்படத்தை, தீவிரவாத தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் போரிட்டு உயிர் துறந்த, “சையத் அடில் ஹுசைன் ஷா” என்று கூறி பலரும் இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

குதிரைக்காரன் காப்பாத்தினான் குதிரைக்காரன் காப்பாத்தினான்னு ரெண்டு நாளா உருண்டு புரண்டுட்டு கெடந்தானுங்க. இப்ப என்னடான்னா இந்த குதிரைக்காரன் தான் பயங்கரவாதிகள் இருந்த இடத்துக்கு கூட்டிட்டு போயி கோர்த்து விட்ருக்கான். அடேய் திராவிடியா பசங்களா, உங்கள செருப்பால அடிச்சாலும் தீராதுடா.

X Link | Archive Link

விரிவான விளக்கம்

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியிலுள்ள பைசாரன் பள்ளாத்தாக்கிலுள்ள சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப். 22) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். 


மேலும் இந்த தாக்குதலின் போது,  தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு உயிரை விட்ட குதிரை சவாரி வீரர், சையத் அடில் ஹுசைன் ஷாவின் செயல் நாடு முழுவதும் பேசப்பட்டது. 


இந்நிலையில், பஹல்காம் தாக்குதலின் போது பல உயிர்களை காப்பாற்றியதாக சொல்லப்பட்ட அந்த குதிரைசவாரி வீரன் தான், பயங்கரவாதிகள் இடத்திற்கு சென்று காட்டிக் கொடுத்தாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 




உண்மை என்ன?


பரவி வரும் புகைப்படம் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர் பெயர் "எஜாஸ் அகமது" என்பதை அறிய முடிந்தது.  ஆனால் பஹல்காம் தாக்குதலின் போது தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு பல உயிர்களை காப்பாற்றியவர் பெயர் “சையத் அடில் ஹுசைன் ஷா”. இருவரும் வேறு வேறு நபர்கள். 


இது குறித்து தேடியதில், “Jagran” ஊடகப் பக்கத்தில், பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு “ஜம்மு-காஷ்மீரின் சோனாமார்க்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு பெண் சுற்றுலாப் பயணி, தனது மதம் பற்றி இவர் கேட்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். சந்தேக நபர் கோஹிபோரா ரைஜானைச் சேர்ந்த எஜாஸ் அகமது என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் ஏன் அந்தப் பெண்ணின் மதத்தைப் பற்றிக் கேட்டார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது“ என்று செய்தி வெளியிட்டிருந்தனர். 



மேலும், இவர் பயங்கரவாதிகள் இடத்திற்கு சென்று காட்டிக் கொடுத்தாரா என்பது குறித்தும் தேடியதில், அது குறித்து எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.


மேலும், “Deccan Herald” ஊடகப் பக்கத்தில் பஹல்காம் தாக்குதலின் போது தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு இறந்து போன குதிரை சவாரி வீரர் குறித்து வெளியிடப்பட்டிருந்த செய்தியில், அவருடைய பெயர்  “சையத் அடில் ஹுசைன் ஷா” என்று குறிப்பிட்டு, அவருடைய புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது. 


இதன் மூலம் தற்போது கைது செய்யப்பட்டுள்ள எஜாஸ் அகமதுவின் புகைப்படத்தை, தீவிரவாத தாக்குதலில் உயிர் துறந்த, “சையத் அடில் ஹுசைன் ஷா” என்று கூறி பலரும் இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. 



முடிவு: 


நம் தேடலில், பஹல்காம் தாக்குதலின் போது பல உயிர்களை காப்பாற்றியதாக சொல்லப்பட்ட அந்த குதிரை சவாரி வீரன் தான், பயங்கரவாதிகள் இடத்திற்கு சென்று காட்டிக்குடுத்தாகக் கூறி பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க