YouTurn

தென் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்பி எடுத்ததாகப் பரவும் பொய் !

தென் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்பி எடுத்ததாகப் பரவும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஒரு சோகமான சூழ்நிலையில் மற்றவர்கள் மனம்கோண சிரிப்பதும், மோசமான வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் செல்பி எடுப்பதும் அரக்கர்களின் மனநிலை; அறிவிலிகள் செயல். 

X post link | Archive link 

விரிவான விளக்கம்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த கனமழை பொழிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து உள்ளனர்.

கடந்த ஒருசில நாட்களில் முக்கிய பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வரும் சூழ்நிலையில், பல இடங்களில் வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று நிவாரணப் பணிகளை கவனித்து வருகின்றார்.





இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த மோசனமான சூழ்நிலையில் உதயநிதி ஸ்டாலின் செல்பி எடுப்பதாக பாஜகவைச் சேர்ந்த கல்யாண் ராமன் எக்ஸ் பக்கத்தில் இப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இதை அதிமுகவைச் சேர்ந்தவர்களும் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


உண்மை என்ன ?  


பரப்பப்படும் புகைப்படத்துடன் நெல்லையில் வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் டிசம்பர் 18ம் தேதி கீழ்காணும் பதிவை பதிவிட்டு இருக்கிறார்.







X post link | Archive link 
அதில், " மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தென் மாவட்டங்களில் அதிதீவிர கன மழை பெய்துள்ள நிலையில் நெல்லை - தூத்துக்குடி - கன்னியாகுமரி - தென்காசி ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை ஒருங்கிணைத்து வரும் மாண்புமிகு அமைச்சர்கள் - அரசு உயர் அதிகாரிகள் - அலுவலர்களை டெல்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தொடர்பு கொண்டு கள நிலவரத்தைக் கேட்டறிந்தார்கள்.

.

நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிலையில், பாளையங்கோட்டை சமாதானபுரம் நிவாரண முகாமிலிருந்து நெல்லையில் உள்ள சூழல் குறித்து நம் முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்தோம்.

.

இந்த இயற்கைப் பேரிடர் நேரத்தில் மக்களை காப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். ஒன்றிணைந்து செயல்பட்டு இப்பேரிடரிலிருந்து தென் மாவட்ட மக்களை மீட்போம் " என இடம்பெற்றுள்ளது. 




வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தியது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு சேனலில் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், அமைச்சர் உதயநிதி பதிவிட்ட புகைப்படங்களில் உள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

.

பாளையங்கோட்டை சமாதானபுரம் நிவாரண முகாமிலிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக முதல்வருடன் ஆலோசனை நடத்திய போது எடுக்கப்பட்ட படத்தை செல்பி எடுத்ததாக தவறாகப் பரப்பி வருகின்றனர். 

.




.

முடிவு : 

.

நம் தேடலில்,  மோசமான வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்பி எடுப்பதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது. அப்புகைப்படம் நிவாரண முகாமிலிருந்து காணொளி வாயிலாக முதல்வருடன் ஆலோசனை நடந்த போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க