
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இதையடுத்து தங்களுக்கு இதுவரை எந்த நியாயமும் கிடைக்கவில்லை என்று கூறி, கடந்த மே 28 அன்று புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி அவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்த அவர்கள் மீது டெல்லி போலீசார் நடத்திய அடக்குமுறை இந்திய அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெல்லி போலீசார், போராட்டக்காரர்களை வழுக்கட்டாயமாக இழுத்து பஸ்சில் ஏற்றி சென்றபோது, வாகனத்தின் உள்ளே மல்யுத்த வீராங்கனைகளான போகத் சகோதரிகள் இருவர் சிரித்துக் கொண்டு அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
Can this performance be our official Oscar Nomination please 😎#WrestlersProtest pic.twitter.com/pgqELhhgvE
— Kashmiri Hindu (@BattaKashmiri) May 28, 2023
Archive Link:
Yov @sunnewstamil, is this too AI or Graphics??? Tell some uruttuuu...
pic.twitter.com/11XNCP8NZl
— Amar Prasad Reddy (@amarprasadreddy) May 28, 2023
Archive Link
பகிரப்படும் பதிவுகளில், உள்ளே சிரித்து விட்டு, வெளியே அழுது போராட்டம் செய்வது போல அவர்கள் நாடகம் ஆடுகின்றனர் என்றும் பாஜகவினர் பரப்பி வந்தனர்.
உண்மை என்ன ?
போலீஸ் வாகனத்தில் மல்யுத்த வீரர்கள் எடுத்துக் கொண்ட உண்மையான புகைப்படத்தை Face App மூலம் எடிட் செய்து சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பி உள்ளனர். இதை Face App மூலம் எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதை கீழே உள்ள வீடியோவின் மூலம் உறுதிப்படுத்த முடிந்தது.
[video width="576" height="1280" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2023/05/Face-App-video.mp4"][/video]
Twitter Link:
மேலும், போகத் சகோதரிகள் சிரித்திருப்பது போன்ற உண்மையான புகைப்படம் குறித்து தேடியதில், அவர்கள் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுவதில்லை என்பதை அறிய முடிந்தது. பரவி வரும் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுந்திருப்பதையும், கீழே உள்ள அவரின் உண்மையான புகைப்படத்தில் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழவில்லை என்பதை பார்க்கலாம்.

இதன் மூலம் பாஜகவினரால் பரப்பப்பட்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இதையடுத்து, மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் பேருந்தின் ஜன்னல் வழியாக சிரித்துக் கொண்டே பேசி செல்லும் வீடியோவை பரப்பி, இது எடிட் செய்யப்பட்டது அல்ல, உண்மையாகவே அவர்கள் சிரித்துக் கொண்டு தான் நாடகமாடுகிறார்கள் என்று பாஜகவின் அமர் பிரசாத் உள்பட பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகினறனர்.
महिला पहलवान विनेश फोगाट ने गिरफ्तारी के बाद कहा " नया देश मुबारक हो "... pic.twitter.com/E48x4flvaL
— Yogita Bhayana योगिता भयाना (@yogitabhayana) May 28, 2023
Archive Link:
அந்த வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அதில் அவர் ஒன்றிய அரசை நையாண்டியாக விமர்சித்து, "புதிய இந்தியா பிறந்தது!" என்று ஹிந்தியில் சொல்வதை கேட்க முடிந்தது. இதன் மூலம் அவர் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும், ஒலிம்பிக் வீரர்களான எங்களை குற்றவாளிகள் போன்று சித்தரிக்கிறார்கள் என்ற வேதனையிலும், புதிய இந்தியாவிற்கு வாழ்த்துகள் என்று நையாண்டியாக கூறியதை தெளிவுப்படுத்த முடிந்தது.
— Shanmuganand Subbarayan (@ShanmuganandSu1) May 28, 2023
Archive Link:
அடுத்ததாக, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் சிரித்து பேசியதாக மற்றொரு வீடியோவையும் சிலர் பரப்பி விமர்சித்து வருகின்றனர். எனவே அந்த வீடியோவில் அவர் ஹிந்தியில் பேசியிருப்பதை ஆய்வு செய்து பார்த்ததில், அதில் "நாங்கள் ஒரு பேருந்தில் இருக்கிறோம், சாக்ஷி வேறொரு பேருந்தில் இருக்கிறார், அவர்கள் எங்களை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது, அவர்கள் எங்கள் தொலைபேசிகளைப் பிடுங்க முயற்சித்தனர், ஆனால் நாங்கள் கொடுக்கவில்லை. இந்தியா முன்னேறி வருகிறது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், முதலில் விவசாயிகள் சாலையில் அமர்ந்து கதறி அழுதனர்.
அப்போது இந்தியா எழவில்லை, அடுத்ததாக இந்திய ராணுவ வீரர்களுக்கும் பேச வாய்ப்பில்லை, இப்போது எங்களை பேருந்தில் இழுத்துச் செல்கிறார்கள். அடுத்து யாருடைய முறை என்று தெரியவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரியான வழியில் தான் செல்கிறது, இது வரலாற்றில் எழுதப்படும். தினேஷ் போகத் மற்றும் சங்கீதா போகத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்." என்று பேசியுள்ளதை காண முடிந்தது.
இதன் மூலம், அவர் வேதனையில் நையாண்டியாக விமர்சித்து பேசியிருப்பது, சமூக வலைதளங்களில் பாஜகவினரால் தவறாகப் பரப்பப்பட்டு உள்ளது என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், வெளியே போராட்டம் செய்துவிட்டு பேருத்திற்குள் சிரித்து நாடகமாடும் மல்யுத்த வீரர்கள் என சமூக வலைதளங்களில் பாஜகவினர் பரப்பி வரும் புகைப்படம் போலியானது என்பதையும், அவர்களின் உண்மையான புகைப்படத்தை Face App போன்ற செயலி மூலம் சிரித்திருப்பது போன்று எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.
