யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மாணவரை கொன்று விட்டதாக போலியான படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.. 
Twitter Link | Archive Link

Twitter Link | Archive Link
விரிவான விளக்கம்
கடந்த அக்டோபர் 07 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்திய பயங்கர தாக்குதலில் சுற்றியுள்ள மக்கள் உட்பட 700 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து 100 இஸ்ரேலியர்கள் காசா நகருக்கு கடத்தி செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் "ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மாணவரை கொன்று விட்டதாக போலியான படப்பிடிப்பு நடத்தப்படுகிறது" பாருங்கள் என்று கூறி 44 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில் ஒரு மாணவன் உயிரிழந்ததைப் போல நடிப்பதையும், அந்த மாணவனை சுற்றி சிலர் கேமராவுடன் நிற்பதையும் பார்க்க முடிகிறது.
Archive Link:
Archive Link
இதேபோல், பாலஸ்தீன குழந்தையை இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்வது போல் போலியான வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் எடுப்பதாகவும் கூறி இதே வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
பரவிவரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் ஆய்வு செய்ததில் இது பாலஸ்தீன குறும்படமான 'Empty Place' உருவாக்கத்தின் போது எடுக்கப்பட்ட படப்பிடிப்பு வீடியோ என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து தேடியதில், Mohamad awawdeh என்பவரின் டிக்டாக் பக்கத்தில் "குழந்தைக் கைதியான அகமது மனாஸ்ராவின் கதையைப் பற்றிய ஒரு குறும்படத்தைப் படமாக்குதல்" என்ற தலைப்புடன் அரபு மொழியில் கடந்த 2022-இல் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

மேலும் தேடியதில், Awni Eshtaiwe என்ற யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவில் படக்குழுவினர் படமெடுத்த அதே காட்சிகள் கடந்த 2022 ஏப்ரல் 19 அன்று வெளியிடப்பட்டிருந்த இந்த குறும்படத்தில் (Empty Place) இடம்பெற்றிருந்ததைக் காண முடிந்தது.

மேலும் படிக்க: காசா மீது இஸ்ரேலின் தாக்குதல் குறித்த செய்திக்குப் பழைய படத்தினை பயன்படுத்திய தினத்தந்தி !
மேலும் படிக்க: இஸ்ரேல் போர் விமானத்திற்கு “சௌம்யா” என பெயரிட்டதாக பரவும் ஃபோட்டோஷாப் வதந்தி !
முடிவு:
நம் தேடலில், இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் குழந்தைகளை கொல்வது போல் போலியான வீடியோக்கள் எடுக்கப்படுவதாகப் பரவும் வீடியோ தகவல்கள் தவறானவை என்பதையும், இது Empty Place என்ற குறும்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.

Pallywood at its best.
The Palestinians are faking scenes where a child is shot by Israeli soldiers. I wish they spent all these resources to promote peace rather than propaganda. pic.twitter.com/WyXk8FjGov
— Hananya Naftali (@HananyaNaftali) April 24, 2022
Archive Link:
Is Rana writing about this 👇
Hamas concocting videos!
Kids have to fake their own death. https://t.co/Cqzo1zRreJ pic.twitter.com/2ADJw3ROqv
— Ashtalakshmi 🇮🇳 (@Ashtalakshmi8) October 9, 2023