YouTurn

பாலியல் புகாரில் சிக்கிய அர்ச்சகர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டவர் எனப் பரவும் பொய்!

பாலியல் புகாரில் சிக்கிய அர்ச்சகர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டவர் எனப் பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இது திராவிட மாடலின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்துக்கு கிடைத்த வெற்றி



X Link | Archive Link

விரிவான விளக்கம்

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி, கோயிலுக்கு சாமி கும்பிட வந்த ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று அத்துமீறியதாகவும், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறி புகார் அளிக்கப்பட்டதையடுத்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட அர்ச்சகர் "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டவர், இது திராவிட அரசுக்கு கிடைத்த வெற்றி என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



உண்மை என்ன?

பரவி வரும் செயுதிகள் குறித்து ஆய்வு செய்ய, முதலில் காளிகாம்பாள் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தான் உள்ளதா என்பது குறித்து தேடிப் பார்த்தோம். இது குறித்து தினத்தந்தி கடந்த அக்டோபர் 04 அன்று "பாரிமுனையில் பழமைவாய்ந்த காளிகாம்பாள் கோவில் இந்து சமய அறநிலையத்துறை வசம் வந்தது" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.

அதில், "பல ஆண்டுகளாக கோவிலை நிர்வகித்து வந்த விஸ்வகர்மா சனாதன தர்ம என்ற தனியார் அறக்கட்டளையினர், 3 வருடத்திற்கு ஒரு முறை தேர்தலை நடத்தி கோவில் நிர்வாகத்திரை நியமித்துவந்த வந்தநிலையில், தற்போது இந்து சமய அறநிலையத்துறை கோவிலை கையகப்படுத்தும் முயற்சியில் புதிய தக்காரை நியமித்துள்ளது" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.



மேலும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட கோவில் அர்ச்சகர் "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" என்ற திட்டத்தின் கீழ் தான் நியமிக்கப்பட்டாரா என்பது குறித்து அறநிலையத்துறை தரப்பிலிருந்து, "சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயில் இந்துசமய அறநிலையத்துறையின்கீழ் தான் வருகிறது. ஆனால், இந்த திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின்கீழ் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது" என்று கூறினர்.

இதன் மூலம் கைது செய்யப்பட்ட அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி உட்பட, காளிகாம்பாள் கோவிலில் உள்ள எந்த அர்ச்சகரும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் நியமிக்கப்படவில்லை என்பது உறுதியானது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம்:

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் கலைஞர் கருணாநிதியால் 1970-ல் முதன்முதலில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஊர்களில் உள்ள முக்கிய கோவில்களில் ஆறு பாடசாலைகள் அமைக்கப்பட்டு அனைத்து சமூகப் பிரிவினரையும் கொண்ட 240 மாணவர்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் தமிழ் முறைப்படி அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், 2021, ஆக்ஸ்ட் 14 அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கியது. அதன்படி பணி நியமன ஆணையைப் பெற்ற அர்ச்சகர்கள் பலரும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் கீழ் செயல்படும் தேரடி கருப்பசாமி திருக்கோவில், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூவாயி அம்மன் கோவில், ராஜபாளையம் அடுத்துள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில், குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோயில் போன்ற பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக பணியமர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இந்து சமய அறநிலையத்துறை குறித்துப் பரப்பப்பட்ட போலி செய்திகளின் தொகுப்பு !

முடிவு:

நம் தேடலில், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சென்னை காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டவர் என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க