YouTurn

காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தில் தான் அப்துல்கலாம் படித்ததாக பொய் செய்தி பரப்பும் சீமான்!

காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தில் தான் அப்துல்கலாம் படித்ததாக பொய் செய்தி பரப்பும் சீமான்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பிறந்தது 1931 ஆம் ஆண்டில். அவர் 1939-ல் தன்னுடைய எட்டு வயதில் ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் ஐந்தாவது வகுப்பை படித்துள்ளார். காமராஜர் ஆட்சிக்கு வந்தபோது அப்துல்கலாமுக்கு வயது 22.

பரவிய செய்தி

காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தில் தான் அப்துல்கலாம் படித்தார் - சீமான்

image.png

Youtube link

விரிவான விளக்கம்

"நேரலை 27-07-2025 சீமான் செய்தியாளர் சந்திப்பு -பம்மல்" என்ற தலைப்பில் செந்தமிழன் சீமான் என்ற யூடியூப் பக்கத்தில், காமராஜர் குறித்து சீமான் பேசிய வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் சரியாக 19.05 நிமிடத்தில், காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தில் தான் அனைவரும் படித்ததாகவும், அப்துல்கலாமே அவர் திறந்த பள்ளியில் தான் படித்ததாகவும் சீமான் கூறியிருந்தார். 


உண்மை என்ன?

முதலில் காமராஜர் முதலமைச்சரான ஆண்டு குறித்து தேடி பார்த்தோம். அப்போது Times Of India ஊடகத்தில் "The man who built Tamil Nadu: How K Kamaraj created blueprint for state's economic and educational transformation" என்ற தலைப்பில் ஜூலை 14,2023 அன்று ஒரு செய்தி கட்டுரை வெளியாகியிருந்த்தை பார்க்கமுடிந்தது. அதில் சுதந்திரத்துக்குப் பிறகு மதராஸ் மாகாணத்தின் முதல்வராக காமராஜர் ஆட்சிக்கு வந்தநாள் ஏப்ரல் 14, 1954 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


அதே போல் Hindu Tamil ஊடகத்தில் "சுதந்திரச் சுடர்கள் | தமிழ்நாடு: மகத்தான மதிய உணவுத் திட்டம்" ஆகஸ்ட் 23,2022 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில்  1956 ஆம் ஆண்டில் மதிய உணவுத் திட்டத்தை மக்கள் பங்களிப்புடன் கூடிய திட்டமாக தமிழகம் முழுவதும் முழுமை அடையச் செய்தவர் காமராஜர்தான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png

இதையடுத்து முன்னாள் குடியரசுத்தலைவர்  அப்துல் கலாம் பிறந்தது, படித்தது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது அவரின் சுயசரிதையான "WINGS OF FIRE" புத்தகத்தின் pdf கிடைத்தது. அதில் அப்துல் கலாம் பிறந்தது 1931ஆம் ஆண்டு என்றும், அவர் 1939-ல் தன்னுடைய எட்டு வயதில் ராமேஸ்வரம் தொடக்கப்பள்ளியில் ஐந்தாவது வகுப்பை படித்துள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும் காமராஜர் ஆட்சிக்கு வந்தபோது அப்துல்கலாமுக்கு வயது 22 ஆகும். இதனால் காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தில் தான் அப்துல்கலாம் படித்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.


முடிவு: 

எனவே, காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தில் படித்தவர் தான் அப்துல்கலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறியுள்ளார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க