YouTurn

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் சீமான்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் சீமான்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் குறித்து கூறியுள்ள தகவல்கள் தவறானவை.

பரவிய செய்தி

அதிமுக ஆட்சியில், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், யாரு வேண்டுமானாலும்  இங்கு வந்து டிஎன்பிஎஸ்சி  தேர்வு எழுதிகொள்ளலாம், வேலை கிடைத்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தமிழ் கற்றுக்கொள்ளலாம் என்று கொண்டுவந்தார்கள்.  திமுக ஆட்சிக்கு வந்தும் இந்த நடைமுறையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், விடியல் பயணம் எப்போது தொடங்கப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.



YouTube Link:

விரிவான விளக்கம்

2025 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த சனிக் கிழமை ( ஜூலை 12) நடைபெற்றது. 3,935 காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வுக்காக, அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 


இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “அதிமுக ஆட்சியில், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், யாரு வேண்டுமானாலும் இங்கு வந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிகொள்ளலாம், வேலை கிடைத்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தமிழ் கற்றுக்கொள்ளலாம் என்று கொண்டுவந்தார்கள்.  திமுக ஆட்சிக்கு வந்தும் இந்த நடைமுறையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், விடியல் பயணம் எப்போது தொடங்கப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது” என்றும் வரிசையாகக் கூறியுள்ளார். 



உண்மை என்ன? 


Claim 1: அதிமுக ஆட்சியில் தான், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், யாரு வேண்டுமானாலும் இங்கு வந்து டிஎன்பிஎஸ்சி  தேர்வு எழுதிகொள்ளலாம், வேலை கிடைத்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தமிழ் கற்றுக்கொள்ளலாம் என்று கொண்டுவந்தார்கள் - சீமான். 


பொதுவாக தமிழ்நாடு அரசு தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்கும் வகையில் அதிமுக ஆட்சியில், சட்டத்திருத்தம் செய்யவில்லை. பல ஆண்டுகளாகவே, பொதுப் பிரிவில் (31%) வெளிமாநிலத்தவர்கள் போட்டி தேர்வில் பங்கேற்கும் நடைமுறை இருந்து வருகிறது. இவர்கள் 69% இடஒதுக்கீட்டில் போட்டியிடுபவர்கள் அல்ல. இது குறித்த செய்தி கடந்த 2019-ல் வெளியிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.


மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி அல்லது பணி நியமனம் செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் தமிழ் மொழித்திறன் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால் பணி ஆணை ரத்து செய்யப்படும் என்கிற விதி அதிமுக ஆட்சியில் இருந்துவந்துள்ளதையும் காண முடிகிறது. இது குறித்து நம் பக்கத்தில் ஏற்கனவே விரிவாக கட்டுரை வெளியிட்டிருக்கிறோம். 


மேலும் படிக்க: தமிழக அரசு தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்கள் சேர 2016-ல் சட்ட திருத்தமா ?


Claim 2: திமுக ஆட்சிக்கு வந்தும், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - சீமான்


தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம் என்கிற அரசாணை கடந்த 2021-லேயே வெளியிடப்பட்டு, தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு முன்பு பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என்று தேர்வு இருந்தநிலையில், பொது ஆங்கிலம் தாள் தேர்வு தற்போது நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Claim 3: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், விடியல் பயணம் எப்போது தொடங்கப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதெல்லாம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கேட்கப்படக் கூடாது - சீமான்


பொதுவாக அரசின் திட்டங்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கேட்கப்படுவது வழக்கமான நடைமுறையே. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விலும், தமிழ்நாடு அரசின் கனவு இல்லத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், விடியல் பயணத் திட்டம் மற்றும் தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டம் சார்ந்த பல வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன என்பதை செய்தியின் மூலம் உறுதிபடுத்த முடிகிறது. 


முடிவு: 


நம் தேடலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் குறித்து கூறியுள்ள தகவல்கள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.