YouTurn

2024 தேர்தலில் பாஜகவை ஆதரிக்க தயார் என சீமான் கூறியதாக தவறாக தலைப்பிட்ட தந்தி டிவி!

2024 தேர்தலில் பாஜகவை ஆதரிக்க தயார் என சீமான் கூறியதாக தவறாக தலைப்பிட்ட தந்தி டிவி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

2024 தேர்தலில் பாஜகவை ஆதரிக்க தயார் என அதிரடியாக பேசிய சீமான் - தந்தி டிவிTwitter Link | Archive Link

விரிவான விளக்கம்

பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூரில் கடந்த  ஜூன் 11 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா 2024-ஆம் ஆண்டிலும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைய உள்ளது. எனவே தமிழ்நாட்டு மக்கள் இதற்கு 25 தொகுதிகளை வென்று கொடுக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும் அக்கூட்டத்தில், "தமிழகத்தில் இருந்து ஒருவர் பிதமராக வர வேண்டும், அதுவும் ஏழைக் குடும்பத்திலிருந்து பிதமராக வர வேண்டும், அதை பாஜகவால் தான் செய்ய முடியும்" என்று பேசினார்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள தந்தி டிவி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், "2024 தேர்தலில் பாஜகவை ஆதரிக்க தயார்" என்று கூறியதாக தலைப்பிட்டு தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.



Archive Link

உண்மை என்ன ?

பரவி வரும் செய்திகள் குறித்து சீமான் பேசிய வீடியோவை ஆய்வு செய்து பார்த்ததில், அவர் பேசியதை தந்தி டிவி தவறான தலைப்புடன் பகிர்ந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.

இதுகுறித்து சீமான் பேசியுள்ள வீடியோவின் முழுப்பகுதியை Newstamil24x7 தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேற்று (ஜூன் 14) வெளியிட்டிருந்தது. அதில் நிரூபர் ஒருவரின், "தமிழ்நாட்டிலிருந்து ஒருவரை பிரதமராக ஆக்குவோம் என்கிறார்களே?" என்ற கேள்விக்கு, பதிலளித்து பேசியுள்ள சீமான், "இவை வாக்குகளைப் பிரிப்பதற்கான நுட்பம், எப்போதும் பாஜக இவ்வாறு தான் செய்யும்.

அதிகமாக தமிழைப் பற்றி பாஜக பேசும். நான் இங்கு அவ்வாறு பேசி வளர்கிறேன் பார்த்தீர்களா? அதே மாதிரி ஈழத்தைப் பற்றியும் பேசும், நாங்கள் அங்கே சாகும் போது எந்தப் பக்கம் தலை வைத்து படுத்திருந்தீர்கள். சிங்களம் என்றால் இந்து ரத்தம் என்று சொன்னீர்கள், அப்போது கங்கையில் போய் மூழ்கி கொண்டிருந்தீர்களா என்ன? இலங்கை இந்திய நட்புறவு என்கிறீர்கள், என்ன நாடகம் இது?" என்று பேசினார்.



மீண்டும் தொடர்ந்த அவர், "சரி அமைச்சர் சொல்லுவது போல தமிழர் பிரதமராக வரட்டும், ஆனால் எப்போது? விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டது, எப்போது? சரி 2024 வது தேர்தலில் ஒரு தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவியுங்கள், நாங்கள் எல்லாரும் ஆதரிச்சு உங்களுக்கு வேலை செய்கிறோம், வாக்கு செலுத்திவிட்டு போகிறோம். அமித்ஷாவிற்கு அந்த துணிவு இருக்கிறதா ?

2024-இல் ஒரு தமிழ் பிரதமர், யாரு தம்பி அண்ணாமலையா? இல்ல அம்மா தமிழிசையா? இல்லை அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணனா? யாரு அதை சொல்லணும்ல? அவ்வாறு எதுவும் செய்யாமல் வாயிலேயே வடை சுட்டு, இன்னும் எத்தனை காலத்திற்கு எங்கள் தமிழர்களை ஏமாற்றுவீர்கள்? இவ்வளவு வைத்துக்கொண்டு தமிழனை வேட்பாளராக எப்போதோ அறிவிப்போம் என்கிறார்கள்? அதை நீங்கள் சொல்ல வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்வோம்." என்று அவர் ஆவேசமாக பேசியுள்ளதைக் காண முடிந்தது.

இதன் மூலம் தமிழகத்தில் இருந்து ஒருவர் பிதமராக வர வேண்டும், அதை பாஜகவால் தான் செய்ய முடியும் என்று அமித்ஷா கூறியதற்கு, அவர்கள் அவ்வாறு செய்ய வாய்ப்பேயில்லை, தமிழ், தமிழர் என்று சொல்லி ஏமாற்றுவதாகப் பேசியதை தந்தி டிவி தவறான தலைப்புடன் வீடியோ வெளியிட்டுள்ளது.

முடிவு:

நம் தேடலில், சீமான் "2024 தேர்தலில் பாஜகவை ஆதரிக்க தயார்" என்று கூறியதாக தந்திடிவி தவறான பொருள் கொள்ளும்படி தலைப்புடன் வெளியிட்டு இருக்கிறது. அமித்ஷாவின் பேச்சிற்கு, 2024வது தேர்தலில் ஒரு தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவியுங்கள், நாங்கள் எல்லாரும் ஆதரிச்சு உங்களுக்கு வேலை செய்கிறோம், வாக்கு செலுத்திவிட்டு போகிறோம். அமித்ஷாவிற்கு அந்த துணிவு இருக்கிறதா ? என ஆவேசமாக கேள்வியையே எழுப்பி இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க